பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு கனேடியர் உட்பட மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் பொருளாதாரம், இயற்பியல், மருத்துவம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், இதர துறைக்கான நோபல் பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில் 2021ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம் மற்றும் கல்வி ஆகியவற்றின் தொழிலாளர் சந்தை பாதிப்புகளை பகுப்பாய்வு செய்தமைக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்ராறியோவின் Guelph பகுதியில் பிறந்த 65 வயதான டேவிட் கார்டுக்கு நோபல் பரிசில் ஒரு பாதி வழங்கப்பட்டது.
இவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
மற்றொரு பாதியை மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியிலிருந்து ஜோசுவா ஆங்கிரிஸ்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கைடோ இம்பன்ஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதன் விளைவுகளை கணக்கிட நியூ ஜெர்சி மற்றும் கிழக்கு பென்சில்வேனியாவில் உள்ள உணவகங்களில் டேவிட் கார்ட் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
What's Your Reaction?






