சுவையான மீன் வறுவல்

தேவையான பொருட்கள்
மீன் - கால் கிலோ
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 5
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
செய்முறை
1 .தனி மிளகாய்த் தூள், குழம்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பூண்டு (தோலுடன் நசுக்கி போடவும்), உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவை விட சற்று கெட்டியாக கலந்துக் கொள்ளவும்.
2. இந்த மசாலாவில் மீனை சேர்த்து நன்கு பிரட்டி அரைமணி நேரம் ஊற விடவும்.
3. தோசை கல்லில் (நாண் ஸ்டிக் வேண்டாம்) 2 தேக்கரண்டி எண்ணெயை சுற்றி ஊற்றி காய விடவும். அதில் மீனை சுற்றி அடுக்கி மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெயை சுற்றி ஊற்றவும்.
4. மீன் ஒரு புறம் வெந்த பின்னர் திருப்பி போட்டு மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெயை சுற்றி ஊற்றவும்.
5. வெந்ததும் எடுத்து பரிமாறவும். மீனை ரொம்ப வேக விட வேண்டாம். சுவையான எண்ணெய் குறைவான மீன் வறுவல் தயார்.
What's Your Reaction?






