கர்ப்பிணிகளுக்கு மிகவும் பிடித்த மாங்காய் சட்னி

சுவையான மாங்காய் சட்னி செய்வது எப்படி பார்ப்போம்.

கர்ப்பிணிகளுக்கு மிகவும் பிடித்த மாங்காய் சட்னி

தேவையானவை

தேங்காய் - அரை மூடி
மாங்காய் - 4 துண்டுகள்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3 (அ) 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க

செய்முறை 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். தேங்காய் மற்றும் மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (அல்லது) துருவிக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காயுடன் மாங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்புச் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.

தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சட்னியில் சேர்க்கவும்.சுவையான மாங்காய் சட்னி தயார்.