Skip to content

Popular

Proverbs 4 · Tamil Bible

நீதிமொழிகள் 4

நீதிமொழிகள் – அதிகாரம் 4

27 வசனங்கள் · தமிழ் & English

அதிகாரங்கள் · Proverbs chapters
  1. நீதிமொழிகள் 4:1

    பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.

    Hear, all of you children, the instruction of a father, and attend to know understanding.

  2. நீதிமொழிகள் 4:2

    நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள்.

    For I give you good doctrine, forsake all of you not my law.

  3. நீதிமொழிகள் 4:3

    நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.

    For I was my father s son, tender and only beloved in the sight of my mother.

  4. நீதிமொழிகள் 4:4

    அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.

    He taught me also, and said unto me, Let yours heart retain my words: keep my commandments, and live.

  5. நீதிமொழிகள் 4:5

    ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.

    Get wisdom, get understanding: forget it not; neither decline from the words of my mouth.

  6. நீதிமொழிகள் 4:6

    அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.

    Forsake her not, and she shall preserve you: love her, and she shall keep you.

  7. நீதிமொழிகள் 4:7

    ஞானமே முக்கியம் ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.

    Wisdom is the principal thing; therefore get wisdom: and with all your getting get understanding.

  8. நீதிமொழிகள் 4:8

    நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.

    Exalt her, and she shall promote you: she shall bring you to honour, when you do embrace her.

  9. நீதிமொழிகள் 4:9

    அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.

    She shall give to yours head an ornament of grace: a crown of glory shall she deliver to you.

  10. நீதிமொழிகள் 4:10

    என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.

    Hear, O my son, and receive my sayings; and the years of your life shall be many.

  1. நீதிமொழிகள் 4:11

    ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.

    I have taught you in the way of wisdom; I have led you in right paths.

  2. நீதிமொழிகள் 4:12

    நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.

    When you go, your steps shall not be straitened; and when you run, you shall not stumble.

  3. நீதிமொழிகள் 4:13

    புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.

    Take fast hold of instruction; let her not go: keep her; for she is your life.

  4. நீதிமொழிகள் 4:14

    துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.

    Enter not into the path of the wicked, and go not in the way of evil men.

  5. நீதிமொழிகள் 4:15

    அதை வெறுத்துவிடு அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.

    Avoid it, pass not by it, turn from it, and pass away.

  6. நீதிமொழிகள் 4:16

    பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.

    For they sleep not, except they have done mischief; and their sleep is taken away, unless they cause some to fall.

  7. நீதிமொழிகள் 4:17

    அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.

    For they eat the bread of wickedness, and drink the wine of violence.

  8. நீதிமொழிகள் 4:18

    நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.

    But the path of the just is as the shining light, that shines more and more unto the perfect day.

  9. நீதிமொழிகள் 4:19

    துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.

    The way of the wicked is as darkness: they know not at what they stumble.

  10. நீதிமொழிகள் 4:20

    என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.

    My son, attend to my words; incline yours ear unto my sayings.

  11. நீதிமொழிகள் 4:21

    அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.

    Let them not depart from yours eyes; keep them in the midst of yours heart.

  12. நீதிமொழிகள் 4:22

    அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.

    For they are life unto those that find them, and health to all their flesh.

  13. நீதிமொழிகள் 4:23

    எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.

    Keep your heart with all diligence; for out of it are the issues of life.

  14. நீதிமொழிகள் 4:24

    வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.

    Put away from you a perverse mouth, and perverse lips put far from you.

  15. நீதிமொழிகள் 4:25

    உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.

    Let yours eyes look right on, and let yours eyelids look straight before you.

  16. நீதிமொழிகள் 4:26

    உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.

    Ponder the path of your feet, and let all your ways be established.

  17. நீதிமொழிகள் 4:27

    வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.

    Turn not to the right hand nor to the left: remove your foot from evil.

இன்றைய வசனம் · Today's Bible Verse ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குத்தத்த வசனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.