Skip to content

Popular

Proverbs 18 · Tamil Bible

நீதிமொழிகள் 18

நீதிமொழிகள் – அதிகாரம் 18

24 வசனங்கள் · தமிழ் & English

அதிகாரங்கள் · Proverbs chapters
  1. நீதிமொழிகள் 18:1

    பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.

    Through desire a man, having separated himself, seeks and intermeddles with all wisdom.

  2. நீதிமொழிகள் 18:2

    மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.

    A fool has no delight in understanding, but that his heart may discover itself.

  3. நீதிமொழிகள் 18:3

    துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும்.

    When the wicked comes, then comes also contempt, and with dishonour reproach.

  4. நீதிமொழிகள் 18:4

    மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.

    The words of a man s mouth are as deep waters, and the wellspring of wisdom as a flowing brook.

  5. நீதிமொழிகள் 18:5

    வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல;

    It is not good to accept the person of the wicked, to overthrow the righteous in judgment.

  6. நீதிமொழிகள் 18:6

    மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.

    A fool s lips enter into contention, and his mouth calls for strokes.

  7. நீதிமொழிகள் 18:7

    மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.

    A fool s mouth is his destruction, and his lips are the snare of his soul.

  8. நீதிமொழிகள் 18:8

    கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுபோலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.

    The words of a talebearer are as wounds, and they go down into the innermost parts of the belly.

  9. நீதிமொழிகள் 18:9

    தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.

    He also that is slothful in his work is brother to him that is a great destroyer.

  10. நீதிமொழிகள் 18:10

    கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.

    The name of the LORD is a strong tower: the righteous runs into it, and is safe.

  1. நீதிமொழிகள் 18:11

    ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்.

    The rich man s wealth is his strong city, and as an high wall in his own conceit.

  2. நீதிமொழிகள் 18:12

    அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

    Before destruction the heart of man is haughty, and before honour is humility.

  3. நீதிமொழிகள் 18:13

    காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.

    He that answers a matter before he hears it, it is folly and shame unto him.

  4. நீதிமொழிகள் 18:14

    மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?

    The spirit of a man will sustain his infirmity; but a wounded spirit who can bear?

  5. நீதிமொழிகள் 18:15

    புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.

    The heart of the prudent gets knowledge; and the ear of the wise seeks knowledge.

  6. நீதிமொழிகள் 18:16

    ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.

    A man s gift makes room for him, and brings him before great men.

  7. நீதிமொழிகள் 18:17

    தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்.

    He that is first in his own cause seems just; but his neighbour comes and searches him.

  8. நீதிமொழிகள் 18:18

    சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.

    The lot causes contentions to cease, and parts between the mighty.

  9. நீதிமொழிகள் 18:19

    அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.

    A brother offended is harder to be won than a strong city: and their contentions are like the bars of a castle.

  10. நீதிமொழிகள் 18:20

    அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.

    A man s belly shall be satisfied with the fruit of his mouth; and with the increase of his lips shall he be filled.

  11. நீதிமொழிகள் 18:21

    மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.

    Death and life are in the power of the tongue: and they that love it shall eat the fruit thereof.

  12. நீதிமொழிகள் 18:22

    மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.

    Whoso finds a wife finds a good thing, and obtains favour of the LORD.

  13. நீதிமொழிகள் 18:23

    தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவுகொடுக்கிறான்.

    The poor uses entreaties; but the rich answers roughly.

  14. நீதிமொழிகள் 18:24

    சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.

    A man that has friends must show himself friendly: and there is a friend that sticks closer than a brother.

இன்றைய வசனம் · Today's Bible Verse ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குத்தத்த வசனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.