Skip to content

Popular

Proverbs 2 · Tamil Bible

நீதிமொழிகள் 2

நீதிமொழிகள் – அதிகாரம் 2

22 வசனங்கள் · தமிழ் & English

அதிகாரங்கள் · Proverbs chapters
  1. நீதிமொழிகள் 2:1

    என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,

    My son, if you will receive my words, and hide my commandments with you;

  2. நீதிமொழிகள் 2:2

    நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

    So that you incline yours ear unto wisdom, and apply yours heart to understanding;

  3. நீதிமொழிகள் 2:3

    ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,

    Yea, if you cry after knowledge, and lift up your voice for understanding;

  4. நீதிமொழிகள் 2:4

    அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,

    If you seek her as silver, and search for her as for hid treasures;

  5. நீதிமொழிகள் 2:5

    அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

    Then shall you understand the fear of the LORD, and find the knowledge of God.

  6. நீதிமொழிகள் 2:6

    கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.

    For the LORD gives wisdom: out of his mouth comes knowledge and understanding.

  7. நீதிமொழிகள் 2:7

    அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்து வைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.

    He lays up sound wisdom for the righteous: he is a buckler to them that walk uprightly.

  8. நீதிமொழிகள் 2:8

    அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.

    He keeps the paths of judgment, and perserves the way of his saints.

  9. நீதிமொழிகள் 2:9

    அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.

    Then shall you understand righteousness, and judgment, and equity; yea, every good path.

  10. நீதிமொழிகள் 2:10

    ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,

    When wisdom enters into yours heart, and knowledge is pleasant unto your soul;

  1. நீதிமொழிகள் 2:11

    நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.

    Discretion shall preserve you, understanding shall keep you:

  2. நீதிமொழிகள் 2:12

    அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,

    To deliver you from the way of the evil man, from the man that speaks perverse things;

  3. நீதிமொழிகள் 2:13

    அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு,

    Who leave the paths of uprightness, to walk in the ways of darkness;

  4. நீதிமொழிகள் 2:14

    தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,

    Who rejoice to do evil, and delight in the perverseness of the wicked;

  5. நீதிமொழிகள் 2:15

    மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.

    Whose ways are crooked, and they perverse in their paths:

  6. நீதிமொழிகள் 2:16

    தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,

    To deliver you from the strange woman, even from the stranger which flatters with her words;

  7. நீதிமொழிகள் 2:17

    இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகி பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.

    Which forsakes the guide of her youth, and forgets the covenant of her God.

  8. நீதிமொழிகள் 2:18

    அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.

    For her house inclines unto death, and her paths unto the dead.

  9. நீதிமொழிகள் 2:19

    அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.

    None that go unto her return again, neither take they hold of the paths of life.

  10. நீதிமொழிகள் 2:20

    ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.

    That you may walk in the way of good men, and keep the paths of the righteous.

  11. நீதிமொழிகள் 2:21

    செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.

    For the upright shall dwell in the land, and the perfect shall remain in it.

  12. நீதிமொழிகள் 2:22

    துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.

    But the wicked shall be cut off from the earth, and the transgressors shall be rooted out of it.

இன்றைய வசனம் · Today's Bible Verse ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குத்தத்த வசனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.