Skip to content

Popular

Proverbs 14 · Tamil Bible

நீதிமொழிகள் 14

நீதிமொழிகள் – அதிகாரம் 14

35 வசனங்கள் · தமிழ் & English

அதிகாரங்கள் · Proverbs chapters
  1. நீதிமொழிகள் 14:1

    புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

    Every wise woman builds her house: but the foolish plucks it down with her hands.

  2. நீதிமொழிகள் 14:2

    நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.

    He that walks in his uprightness fears the LORD: but he that is perverse in his ways despises him.

  3. நீதிமொழிகள் 14:3

    மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.

    In the mouth of the foolish is a rod of pride: but the lips of the wise shall preserve them.

  4. நீதிமொழிகள் 14:4

    எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.

    Where no oxen are, the crib is clean: but much increase is by the strength of the ox.

  5. நீதிமொழிகள் 14:5

    மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

    A faithful witness will not lie: but a false witness will utter lies.

  6. நீதிமொழிகள் 14:6

    பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.

    A scorner seeks wisdom, and finds it not: but knowledge is easy unto him that understands.

  7. நீதிமொழிகள் 14:7

    மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய்.

    Go from the presence of a foolish man, when you perceive not in him the lips of knowledge.

  8. நீதிமொழிகள் 14:8

    தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.

    The wisdom of the prudent is to understand his way: but the folly of fools is deceit.

  9. நீதிமொழிகள் 14:9

    மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.

    Fools make a mock at sin: but among the righteous there is favour.

  10. நீதிமொழிகள் 14:10

    இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.

    The heart knows his own bitterness; and a stranger does not intermeddle with his joy.

  1. நீதிமொழிகள் 14:11

    துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.

    The house of the wicked shall be overthrown: but the tabernacle of the upright shall flourish.

  2. நீதிமொழிகள் 14:12

    மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.

    There is a way which seems right unto a man, but the end thereof are the ways of death.

  3. நீதிமொழிகள் 14:13

    நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.

    Even in laughter the heart is sorrowful; and the end of that delight is heaviness.

  4. நீதிமொழிகள் 14:14

    பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.

    The backslider in heart shall be filled with his own ways: and a good man shall be satisfied from himself.

  5. நீதிமொழிகள் 14:15

    பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.

    The simple believes every word: but the prudent man looks well to his going.

  6. நீதிமொழிகள் 14:16

    ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.

    A wise man fears, and departs from evil: but the fool rages, and is confident.

  7. நீதிமொழிகள் 14:17

    முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.

    He that is soon angry deals foolishly: and a man of wicked devices is hated.

  8. நீதிமொழிகள் 14:18

    பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.

    The simple inherit folly: but the prudent are crowned with knowledge.

  9. நீதிமொழிகள் 14:19

    தீயோர் நல்லோருக்கு முன்பாகவும் துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.

    The evil bow before the good; and the wicked at the gates of the righteous.

  10. நீதிமொழிகள் 14:20

    தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.

    The poor is hated even of his own neighbour: but the rich has many friends.

  11. நீதிமொழிகள் 14:21

    பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.

    He that despises his neighbour sins: but he that has mercy on the poor, happy is he.

  12. நீதிமொழிகள் 14:22

    தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.

    Do they not go astray that devise evil? but mercy and truth shall be to them that devise good.

  13. நீதிமொழிகள் 14:23

    சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.

    In all labour there is profit: but the talk of the lips tends only to destitution.

  14. நீதிமொழிகள் 14:24

    ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே.

    The crown of the wise is their riches: but the foolishness of fools is folly.

  15. நீதிமொழிகள் 14:25

    மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

    A true witness delivers souls: but a deceitful witness speaks lies.

  16. நீதிமொழிகள் 14:26

    கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.

    In the fear of the LORD is strong confidence: and his children shall have a place of refuge.

  17. நீதிமொழிகள் 14:27

    கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

    The fear of the LORD is a fountain of life, to depart from the snares of death.

  18. நீதிமொழிகள் 14:28

    ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை, ஜனக்குறைவு தலைவனின் முறிவு.

    In the multitude of people is the king s honour: but in the lack of people is the destruction of the prince.

  19. நீதிமொழிகள் 14:29

    நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.

    He that is slow to wrath is of great understanding: but he that is hasty of spirit exalts folly.

  20. நீதிமொழிகள் 14:30

    சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.

    A sound heart is the life of the flesh: but envy the rottenness of the bones.

  21. நீதிமொழிகள் 14:31

    தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.

    He that oppresses the poor reproaches his Maker: but he that honors him has mercy on the poor.

  22. நீதிமொழிகள் 14:32

    துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.

    The wicked is driven away in his wickedness: but the righteous has hope in his death.

  23. நீதிமொழிகள் 14:33

    புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.

    Wisdom rests in the heart of him that has understanding: but that which is in the midst of fools is made known.

  24. நீதிமொழிகள் 14:34

    நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.

    Righteousness exalts a nation: but sin is a reproach to any people.

  25. நீதிமொழிகள் 14:35

    ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.

    The king s favour is toward a wise servant: but his wrath is against him that causes shame.

இன்றைய வசனம் · Today's Bible Verse ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குத்தத்த வசனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.