மருத்துவமனையில் இறக்கும் தருவாயிலும் ஒருவரை மட்டும் பார்க்க விரும்பிய பாடகர் எஸ்.பி.பி

Sep 27, 2021 - 07:01
 0  72
மருத்துவமனையில் இறக்கும் தருவாயிலும் ஒருவரை மட்டும் பார்க்க விரும்பிய பாடகர் எஸ்.பி.பி

தமிழ் சினிமா கடந்த வருடம் நிறைய சோகமான விஷயத்தை சந்தித்துள்ளது. யாருமே எதிர்ப்பார்க்காத பிரபலங்களின் மரண செய்தி நம்மை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதில் முக்கியமாக பாடகர் எஸ்.பி.பியை கூறலாம். அவர் நம்மைவிட்டு செல்வார் என யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. பாடகரின் முதல் நினைவு நாள் வந்தது, எல்லோரும் அவருக்காக பிராத்தனை செய்தார்கள்.

சில பிரபலங்கள் பாடகரின் நினைவு நாளுக்காக கூடினார்கள். அதில் இளையராஜா பேசும்போது, பாலுவுக்கும் எனக்கும் எப்படிபட்ட உறவு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

மருததுவமனையில் மிகவும் சீரியஸாக இருந்த போது கூட என்னை மட்டுமே பார்க்க விரும்பியுள்ளார். ஒரு போனில் இருந்த என்னுடைய புகைப்படத்திற்கு முத்தமும் கொடுத்துள்ளார்.

இதில் இருந்தே தெரிகிறது அவரது மனதில் எனக்கு எவ்வளவு இடம் கொடுத்தார் என பேசியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow