மாடித்தோட்டத்தில் எலுமிச்சைப்பழம் பயிரிடும் முறை

Jan 12, 2022 - 00:00
 0  562
மாடித்தோட்டத்தில் எலுமிச்சைப்பழம் பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் எலுமிச்சைப்பழம் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • அகன்ற தொட்டி
  • அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
  • வேர்விட்ட பதியன் குச்சிகள்
  • கவாத்து உபகரணங்கள்

தொட்டிகள்

தொட்டிகளில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.

இதன் தொட்டிகளை சிறு கற்களை நிரப்பி அதன் மீது வைக்க வேண்டும். செங்கற்களை வட்டமாக வைத்து அதன் மீதும் வைக்கலாம்.

விதைத்தல்

தொட்டிகளின் மையத்தில் வேர்விட்ட குச்சிகளை நடவு செய்ய வேண்டும். இதனுடன் ஒரு குச்சியையும் சேர்த்து நடவு செய்ய வேண்டும். குச்சியை செடியுடன் சேர்த்து கட்ட வேண்டும்.

நீர் நிர்வாகம்

செடிகளை நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்பொழுது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் தென்னை நார்க்கழிவு ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

உரங்கள்

சமையலறை கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம்.

ஒரு கையளவு மண்புழு உரத்தை மாதம் ஒருமுறை செடிகளின் அடிபகுதியில் இட்டு கிளறி விட வேண்டும்.

பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூள், வேப்பங்கொட்டை தூள் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இஞ்சி, பூண்டு கரைசலையும் பயன்படுத்தலாம்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

வளரும் நுனி கிளைகளை நீக்கி கவாத்து செய்ய வேண்டும். இதன் மூலம் அதிக பக்கக்கிளைகள் தோன்றும். நான்கு ஆரோக்கியமான கிளைகளை வளர அனுமதிக்க வேண்டும்.

அறுவடை

நன்கு திரண்ட காய்களை அறுவடை செய்ய வேண்டும்.

எலுமிச்சைப்பழம் பயன்கள்:
  • தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பதன் முலம் சிறுநீரில் உள்ள சிட்ராஸ் அளவை குறைத்து சிருநிர்ப்பையில் கல் சேர்வதைத் தடுக்க உதவுகிறது.
  • ஏதேனும் பூச்சிக்கடியால் தோலில் அரிப்பு ஏற்பட்டால் எலுமிச்சை பலத்தை சிறிதாக நறுக்கி கடி பட்ட இடத்தில் தடவ வேண்டும். பூச்சிக்கடியால் ஏற்பட்ட அலர்ஜியை இது குறைக்கும்.
  • எலுமிச்சை பழசாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல்,வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
  • எலுமிச்சைப் பழச்சாறை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.செரிமானப் பிரச்சனைகள், குமட்டல், வாந்தி, போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணியாக செயல்படுகிறது.
  • தினமும் ஏதேனும் ஒரு வகையில் எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவதன் முலம் உடல் எடை குறையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow