மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் பயிரிடும் முறை

மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் பயிரிடும் முறை

 0  402
மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்

  • Grow Bags அல்லது Thotti.
  • அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
  • விதைகள்
  • நீர் தெளிக்க பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

வெண்டை செடி வளர்க்க சிறிய பை அல்லது தொட்டி போதுமானது.

தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு இட்டு தொட்டியை நிரப்ப வேண்டும். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும்.

செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

விதைத்தல்

நோய் தாக்காத, ஆரோக்கியமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். பைகளில் விதைகளை விதைத்து கைகளால் கிளறி விட வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர் ஊற்ற வேண்டும்.

உரங்கள் :

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒருமுறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நநன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

பாதுகாப்பு முறைகள் :

செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒருமுறை கொத்தி விட வேண்டும். மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது.

வெண்டையில் முற்றிய பெரு இலைகளையும், பழுத்த இலைகளையும் அடிக்கடி நீக்க வேண்டும். இதனால் நோய் தாக்கும் அபாயம் குறையும்.

பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளில் மேல் தெளிக்க வேண்டும்.

அறுவடை :

காய்கறிகளை முற்றி விடாமல் சரியான பருவத்தில் தினமும் அறுவடை செய்ய வேண்டும்.

வெண்டைக்காயின் பயன்கள்:

  • குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சிக்கும் பிறப்பு குறைபாடுகளை தடுக்கவும் தேவையான போலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறைந்து காணப்படுகிறது. எனவே கர்பிணிப்பெண்கள் அதிக அளவு வெண்டைக்காய் உண்ணவேண்டும்.
  • பிஞ்சு முருங்கைக்காயை தொடர்ந்து உண்ணும்பொழுது புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • பெண்களுக்கு அதிக அளவு உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலியை போக்க பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.
  • பிஞ்சு வெண்டைக்காயை நன்றாக கழுவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடன் குளிர்ச்சியடையும்.
  • பிஞ்சு வெண்டைக்காயில் உள்ள அதிக அளவு வேதிச்சத்துக்கள் ரத்த கட்டிகள் உருவாகுவதை தடுக்கும் வல்லமை உடையது. மூளைக்கு நல்ல நினைவாற்றலையும், மூளை செயலிழப்பையும் தடுக்கிறது.

தேடலுக்கு
மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் பயிரிடும் முறை
maadi thottathil vendakkai payiridum murai

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow