இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(30-05-2020)

இன்றைய ராசி பலன்கள்,இன்றைய பஞ்சாங்கம்,astrology,சோதிடம்,ஜோதிடம்,என் ஜோதிடம்,rasi palan ,today rasipalan,ராசிபலன்,jothidam,மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம்,அதிர்ஷ்ட திசை ,அதிர்ஷ்ட எண் ,அதிர்ஷ்ட நிறம்

May 30, 2020 - 08:27
 0  165
இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(30-05-2020)

இன்றைய பஞ்சாங்கம்

மே-30

பஞ்சாங்கம ~ வைகாசி . ~17(30.05.2020)
சனிக்கிழமை.
வருடம்~ சார்வரி வருடம்.
{சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வசந்த ருதௌ
மாதம்~வைகாசி ( ரிஷப மாஸம்)
*பக்ஷம் ~ சுக்ல பக்ஷம் *
*திதி~ அஷ்டமி மாலை 05.12 வரை பிறகு நவமி.
*ஸ்ரார்த்த திதி ~ அஷ்டமி.

நாள் ~ சனிக்கிழமை (ஸ்திர வாஸரம்)
நக்ஷத்திரம்: மகம் (மகா) அதிகாலை 03.41 வரை பிறகு பூரம் (பூர்வபல்குனீ).
யோகம்~ அதி காலை 03.41 வரை சித்த யோகம் பிறகு மரண யோகம். *நல்ல நேரம் ~ 07.30 ~ 08.30 AM 04.30~ 05.30 PM .
ராகு காலம்~ காலை 09.00~10.30
எமகண்டம்~ மாலை 01.30~03.00
குளிகை ~ காலை 06.00 ~ 07.30.
சூரிய உதயம்~ காலை 05.56 AM.
சூரிய அஸ்தமனuம்~ மாலை 06.25 PM.
*குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும். *சந்திராஷ்டமம்~ திருவோணம்.
சூலம்~ கிழக்கு.


இன்றைய (30-05-2020) ராசி பலன்கள்

மேஷம்

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். எதிர்பாராத தனவரவுகள் சாதகமான பலன்களை அளிக்கும். மனைவிவழி உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும்.

பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.

கிருத்திகை : சாதகமான நாள்.

ரிஷபம்

எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். மனை தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் நிலவும். எந்த ஒரு வேலையையும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படுத்தவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.

மிதுனம்

செய்யும் வேலையில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கி வெற்றி உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் சம்பந்தமான முயற்சிகள் சாதகமான பலனை அளிக்கும். அலுவலகத்தில் இருந்த பொறுப்புகள் குறையும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : தடைகள் அகலும்.

திருவாதிரை : பொறுப்புகள் குறையும்.

புனர்பூசம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

கடகம்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். பயணங்கள் நினைத்த பலன்களை தரும். புத்திரர்களின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வாக்கு சாதுர்யத்தால் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : தேவைகள் நிறைவேறும்.

பூசம் : இன்பமான நாள்.

ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.

சிம்மம்

தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும். உயர்கல்வி பயில்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நிர்வாகம் தொடர்பான புதிய முடிவுகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். தாய் பற்றிய கவலைகள் மனதில் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : முயற்சிகள் ஈடேறும்.

பூரம் : சாதகமான நாள்.

உத்திரம் : கவலைகள் மறையும்.

கன்னி

அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : வாதங்களை தவிர்க்கவும்.

அஸ்தம் : விமர்சனங்கள் உண்டாகும்.

சித்திரை : அனுகூலமான நாள்.

துலாம்

எந்த ஒரு செயலையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி சம்பந்தமான செலவுகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.

சுவாதி : சுபவிரயம் உண்டாகும்.

விசாகம் : சாதகமான நாள்.

விருச்சகம்

செய்யும் புதிய முயற்சிகளால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கூட்டாளிகளின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு விவகாரங்களில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : சாதகமான நாள்.

அனுஷம் : கவனத்துடன் இருக்கவும்.

கேட்டை : சுபிட்சம் உண்டாகும்.

தனுசு

புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சிறு சிறு தடைகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் இருந்துவந்த வேலைப்பளு குறையும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : அபிவிருத்தி உண்டாகும்.

பூராடம் : தடைகள் நீங்கும்.

உத்திராடம் : சேமிப்பு குறையும்.

மகரம்

தேவையற்ற மனக்குழப்பங்களால் செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் உரையாடும் போது சற்று கவனத்துடன் உரையாடவும். புதிய முதலீடுகளில் பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்பது நன்மையை அளிக்கும். சமூக சேவையில் ஈடுபடுபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்.

திருவோணம் : கவனத்துடன் உரையாடவும்.

அவிட்டம் : நிதானத்துடன் செயல்படவும்.

கும்பம்

பெரியோர்களின் ஆசீர்வாதத்தால் சுபிட்சமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். வெளியூரிலிருந்து எதிர்பாராத செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளால் செல்வமும், செல்வாக்கும் உயரும். மனதில் இருந்துவந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அவிட்டம் : சுபிட்சமான நாள்.

சதயம் : கலகலப்பான சூழல் அமையும்.

பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.

மீனம்

திட்டமிட்ட காரியங்களில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் பொருளாதார சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

பூரட்டாதி : சுறுசுறுப்பு மேம்படும்.

உத்திரட்டாதி : அனுபவம் உண்டாகும்.

ரேவதி : சிக்கல்கள் குறையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow