Tamil · English typing speed test
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி
Type the passage as fast and as correctly as you can. The timer starts with your first key; you get words per minute, accuracy and every mistake at the end.
- நேரம் · Time left
- 5:00
- வேகம் · WPM
- 0
- துல்லியம் · Accuracy
- 100%
பாமினி விசைப்பலகை வரைபடம் · Bamini keyboard chart
மேலே: Shift உடன் · கீழே: Shift இல்லாமல். Top: with Shift · Bottom: without Shift.
உங்கள் முடிவு · Your result
- Net speed
- 0 WPM
- Gross speed
- 0 WPM
- Accuracy
- 0%
- Mistakes
- 0
தவறான சொற்கள் · Words to practise
மதிப்பெண் எப்படிக் கணக்கிடப்படுகிறது? · How the score works
- Gross WPM – நிமிடத்துக்கு நீங்கள் தட்டச்சு செய்த மொத்தச் சொற்கள் (சரியும் தவறும் சேர்த்து).
- Net WPM – நிமிடத்துக்கு சரியாக தட்டச்சு செய்த சொற்கள் மட்டும். உண்மையான வேகம் இதுதான்.
- Accuracy – நீங்கள் தட்டச்சு செய்த சொற்களில் சரியானவை எத்தனை சதவீதம்.
- ஒரு சொல்லில் ஒரு எழுத்து அல்லது குறியீடு (comma, full stop) தவறினாலும் அந்தச் சொல் தவறாகக் கணக்கிடப்படும். தேர்வுகளிலும் இப்படித்தான்.
- நகலெடுத்து ஒட்டுவது (paste) இந்தப் பயிற்சியில் அனுமதிக்கப்படாது.
வேகத்தை அதிகரிக்க சில குறிப்புகள்
- விசைப்பலகையைப் பார்க்காமல் தட்டச்சு செய்யப் பழகுங்கள் (touch typing). தொடக்கத்தில் மெதுவாக இருந்தாலும் சில வாரங்களில் வேகம் இரட்டிப்பாகும்.
- வேகத்தை விட துல்லியம் முக்கியம். முதலில் 95% துல்லியத்தை அடையுங்கள்; வேகம் தானாக வரும்.
- தினமும் 15–20 நிமிடம் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் Net WPM-ஐக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- முடிவில் காட்டப்படும் தவறான சொற்களைத் தனியாக ஐந்து முறை தட்டச்சு செய்து பழகுங்கள்.
- நேராக அமர்ந்து, மணிக்கட்டுகளை விசைப்பலகைக்கு இணையாக வைத்துக்கொள்ளுங்கள்; நீண்ட பயிற்சியில் கை வலி வராது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நல்ல தமிழ் தட்டச்சு வேகம் எவ்வளவு?
தொடக்கநிலையில் நிமிடத்துக்கு 15–20 சொற்கள் இயல்பானது. தொடர்ந்து பயிற்சி செய்பவர்கள் 30–40 சொற்களை எட்டுகிறார்கள். அரசுத் தட்டச்சுத் தேர்வுகளின் வேகத் தேவை நிலைக்கு (Junior / Senior) ஏற்ப மாறும்; அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து உறுதி செய்துகொள்ளுங்கள்.
பாமினி (தட்டச்சுப்பொறி) அமைப்பில் பயிற்சி செய்யலாமா?
ஆம். "விசைப்பலகை" பட்டியலில் பாமினி · Bamini (Typewriter) என்பதைத் தேர்ந்தெடுங்கள். தமிழ் தட்டச்சுப்பொறியில் அழுத்துவது போலவே விசைகளை அழுத்தினால் (f = க, k = ம, ; = ்) அவை தானாகத் தமிழ் எழுத்துகளாகத் தெரியும்; எந்த எழுத்துருவையும் நிறுவ வேண்டியதில்லை. கணினியின் மொழியை English-ல் வைத்திருங்கள். எந்த விசையில் எந்த எழுத்து என்பதை பயிற்சிப் பெட்டியின் கீழே உள்ள விசைப்பலகை வரைபடத்தில் பார்க்கலாம். நேரடியாகப் பாமினி பயிற்சியைத் திறக்க: Bamini typing test.
தமிழ் விசைப்பலகை இல்லாமல் பயிற்சி செய்யலாமா?
ஆம். "விசைப்பலகை" பட்டியலில் "English → தமிழ்" என்பதைத் தேர்ந்தெடுத்து, சொற்களை ஆங்கில எழுத்தில் தட்டச்சு செய்து Space அழுத்தினால் தமிழாக மாறும். ஆனால் தட்டச்சுத் தேர்வுக்குத் தயாராகிறீர்கள் என்றால், தேர்வில் பயன்படுத்தப்படும் விசைப்பலகை அமைப்பிலேயே பயிற்சி செய்வது நல்லது.
என் மதிப்பெண் எங்கே சேமிக்கப்படுகிறது?
உங்கள் சிறந்த மதிப்பெண் இந்த உலாவியில் (browser) மட்டும் சேமிக்கப்படுகிறது; எங்கள் சர்வருக்கு அனுப்பப்படுவதில்லை.
மேலும் கருவிகள் · More tools
அனைத்தும் · All 47 ›- அ தமிழ் தட்டச்சு Tamil Typing
- ⇄ மொழிபெயர்ப்பு English ↔ Tamil Translation
- ✎ தமிழ் எழுத்துப் பலகை Online Text Editor
- Bm பாமினி → யூனிகோடு Bamini to Unicode
- Uni யூனிகோடு → பாமினி Unicode to Bamini
- Aa தமிழ் → English Tamil to English Letters
- 🔥 FLAMES FLAMES Calculator
- ♥ காதல் கணிப்பான் Love Calculator
- 💍 திருமண பொருத்தம் Thirumana Porutham