இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழகிழமை(24-06-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழகிழமை(24-06-2022)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழகிழமை(24-06-2022)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு 
ஆனி 9 

1,#நாள் :வியாழக்கிழமை (23.06.2022)

2,#நட்சத்திரம் : ரேவதி 06:14 AM வரை பிறகு அஸ்வினி

3,#திதி : 09:41 PM வரை தசமி பின்னர் ஏகாதசி

4,#யோகம் : சித்த - அமிர்த யோகம்

5,#கரணம் : வணிசை மதியம் 01:54 வரை பின்பு பத்திரை

நல்லநேரம் : காலை : 10.30 - 11.30

வியாழக்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
(காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)

சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

இன்று: தேய்பிறை  சுபமுகூர்த்த நாள்

நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
00:00 - 00:00 மா / PM
கௌரி நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
01.30 - 03.00
எமகண்டம்
06.00 - 07.30
குளிகை
09.00 - 10.30

சூலம்: தெற்கு
பரிகாரம்- தைலம்

#சந்திராஷ்டமம்
பூரம்+உத்திரம்

வழிபாடு தெய்வம் தட்சிணாமூர்த்தி & 
சித்தர்கள் வழிபாடு

சம நோக்கு நாள்

லக்னம்: மிதுன லக்னம் இருப்பு நாழிகை 03 வினாடி 56

#சூரிய_உதயம்
Sun Rise 05:54 காலை / AM

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். யாரும் உங்களை புரிந்து  கொள்ளவில்லை என ஆதங்கம் ஏற்படும் 
உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. உடல்நலம் பாதிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.  உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். புகழ் கௌரவம் கூடும் நாள்.

கடகம்

கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கைமாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித்தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்து கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மனைவி வழி உறவினர்களால் ஆதரவுக் கிட்டும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப் படும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு வாங்குவது குறித்து யோசிப் பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.

தனுசு

தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றி நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம்

மகரம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களை கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வாகன வசதிப் பெருகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.