இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(26-04-2020)
இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(26-04-2020)

#இன்றையபஞ்சாங்கம்
26-#ஏப்ரல்-2020
#சூரியோதயம் : 6:04 am #சந்திரௌதயம் : 08:16 AM
#சூரியாஸ்தமனம் : 6:30 pm #சந்திராஸ்தமனம் : 09:22 PM
#சூரியன்ராசி : மேஷம்
#சந்திரன்ராசி : ரிஷபம்
#மாதம் : சித்திரை 13'ம் நாள்
#பக்ஷம் : சுக்ல பக்ஷம்
#பஞ்சாங்கம்
1️⃣,#வாரம் : ஞாயிறு
2️⃣,#திதி : திருதியை இறுதி 01:23 pm சதுர்த்தி
3️⃣,#நட்சத்திரம் : ரோகிணி இறுதி 10:56 pm மிருகசீரிடம்
4️⃣,#யோகம் : சோபனம் இறுதி 11:54 pm அதிகண்டம்
5️⃣,#கரணம் :கரசை 01:23 pm
வனசை 02:00 am
#நல்ல_நேரம்
அபிஜித் : 11:52 am – 12:42 pm
அமிர்த காலம் : 07:27 pm – 09:11 pm
ஆனந்ததி யோகம் : 10:56 pm Soumya
#கெட்ட_நேரம்
ராகுகாலம் : 4:14 PM – 5:31 PM
யம கண்டம் : 12:24 PM – 1:41 PM
தியாஜ்யம் : 14:17 pm – 16:01 pm
குளிகன் : 2:57 PM – 4:14 PM
#துர்முஹுர்த்தம்
04:09 PM – 04:50 PM
#நாள்_முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. #அட்சய_திருதியை. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
#சுப_ஹோரைகள்
காலை 7.00 – 9.00, r
பகல் 11.00 – 12.00 ,
மதியம் 02.00 – 04.00,
மாலை 06.00 – 07.00,
இரவு 09.00 – 11.00,t
#சந்திராஷ்டமம்
#விசாகம்
#அனுஷம்
Tamil dhinasari
Home ஜோதிடம் பஞ்சாங்கம்
ஜோதிடம்பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்.26- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
By சித்தர் சீராம பார்ப்பனனார்- 26/04/2020 12:05 AM
Save
Dhinasari Jothidam copy 6
Dhinasari Jothidam copy 6
இன்றைய பஞ்சாங்கம்: ஏப்.26
ஶ்ரீராமஜயம்
*பஞ்சாங்கம ~ சித்திரை . ~13(26.04.2020) ஞாயிற்றுக்கிழமை.
வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம்~ *உத்தராயணம் .
ருது~வசந்த ருதௌ.
மாதம்~சித்திரை ( மேஷ மாஸம்)
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம் *பகல் 12.21 வரை
த்ருதீயை பிறகு சதுர்த்தி .
*ஸ்ரார்த்த திதி ~ சதுர்த்தி.
நாள் ~ ஞாயிற்றுக்கிழமை ( பாநு வாஸரம்)
நக்ஷத்திரம்: ரோஹிணி (ரோஹிணீ) இரவு 09.38 வரை பிறகு ம்ருகசீர்ஷம் (ம்ருகசீர்ஷா).
யோகம் ~இரவு
09.38 வரை அம்ருத யோகம் பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம் ~ 07.30~08.30 AM & 03.30~ 04.30 PM .
ராகு காலம்~ மாலை 04.30~06.00
எமகண்டம்~ மாலை 12.00~01.30
குளிகை ~ மாலை 03.00 ~ 04.30.
சூரிய உதயம்~ காலை 06.07 AM.
சூரிய அஸ்தமனம்~ மாலை 06.20 PM.
குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும்.
சந்திராஷ்டமம்~ விசாகம், அனுஷம்.
சூலம்~ மேற்கு .
இன்று ~ அக்ஷய திருதியை.
தினசரி -பஞ்சாங்கம்
இன்றைய ( 26-04-2020) ராசி பலன்கள்
மேஷம்
எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். சொத்துச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அஸ்வினி : வரவுகள் கிடைக்கும்.
பரணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்
உடல் தோற்றப் பொலிவு மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவதால் எண்ணிய வெற்றி கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை விமர்சிப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : பொலிவு அதிகரிக்கும்.
ரோகிணி : வெற்றி கிடைக்கும்.
மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.
மிதுனம்
வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : நெருக்கடியான நாள்.
திருவாதிரை : பிரச்சனைகள் மறையும்.
புனர்பூசம் : அமைதி வேண்டும்.
கடகம்
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பதால் வியாபாரிகளின் இலாபம் பெருகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.
பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
ஆயில்யம் : இலாபம் பெருகும்.
சிம்மம்
வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நன்மை அளிக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு உயர் பதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : உயர்வு உண்டாகும்.
கன்னி
உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வருங்காலம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் சேமிப்புகள் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : சேமிப்பு அதிகரிக்கும்.
சித்திரை : ஆதரவான நாள்.
துலாம்
விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மனவருதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் வேலையாட்களால் இலாபம் குறையும். தொழிலில் உற்பத்தி, விற்பனை மிதமான அளவில் இருக்கும். எதிர்ப்புகளால் வீண் சிரமம் உருவாகலாம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : மனவருத்தங்கள் ஏற்படலாம்.
விசாகம் : காலதாமதம் உண்டாகும்.
விருச்சகம்
கணவன், மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தனவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் நடைபெறுவதற்கான சூழல் தோன்றும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
விசாகம் : மனக்கசப்புகள் நீங்கும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : தொடர்புகள் அதிகரிக்கும்.
தனுசு
எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். எதிரிகளின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். நிலுவையில் இருக்கும் பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றி மறையும். பணியில் உள்ள பொறுப்புகளை சாதுர்யதமாக செயல்பட்டு செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : மாற்றமான நாள்.
உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
மகரம்
தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளால் பெருமை உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் படிப்படியான வளர்ச்சி ஏற்படும். கலை சார்ந்தப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவோணம் : பெருமை உண்டாகும்.
அவிட்டம் : வளர்ச்சி ஏற்படும்.
கும்பம்
செய்யும் செயல்களில் தடைகளும், மனதில் தடுமாற்றங்களும் வந்து சேரும். வாகனப் பழுது செலவுகள் ஏற்படலாம். பழைய கடன்களை அடைப்பதற்கான சிந்தனைகள் உருவாகும். குடும்ப நபர்களின் ஆதரவால் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பணி சம்பந்தமான செயல்பாடுகளை புரிந்து கொள்வதில் குழப்பம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : செலவுகள் ஏற்படலாம்.
சதயம் : தீர்வு கிடைக்கும்.
பூரட்டாதி : குழப்பம் உண்டாகும்.
மீனம்
உடன்பிறந்தவர்களால் அதிக நன்மைகள் ஏற்படும். பொருள் வரவில் இருந்துவந்த தடைகள் அகலும். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும். புதிய ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : நன்மைகள் ஏற்படும்.
உத்திரட்டாதி : உற்சாகம் பிறக்கும்.
ரேவதி : மேன்மை உண்டாகும்.
What's Your Reaction?






