இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்க்கிழமை(19-05-2020)

இன்றைய ராசி பலன்கள்,இன்றைய பஞ்சாங்கம்,astrology,சோதிடம்,ஜோதிடம்,என் ஜோதிடம்,rasi palan ,today rasipalan,ராசிபலன்,jothidam,மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம்,அதிர்ஷ்ட திசை ,அதிர்ஷ்ட எண் ,அதிர்ஷ்ட நிறம்

May 18, 2020 - 21:37
 0  123

இன்றைய பஞ்சாங்கம் 

பஞ்சாங்கம ~ வைகாசி .

 ~06(19. 05.2020) செவ்வாய்க்கிழமை.
வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வசந்த ருதௌ
மாதம்~வைகாசி ( ரிஷப மாஸம்)
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்
திதி மாலை 0 7.11 வரை துவாதசி பிறகு த்ரயோதசி.
*ஸ்ரார்த்த திதி ~ துவாதசி.
நாள் ~ செவ்வாய்க்கிழமை* (பௌம வாஸரம்)
நக்ஷத்திரம்: ரேவதி (ரேவதீ) இரவு 09.25 வரை பிறகு அஸ்வினி (அஸ்வினீ). *யோகம்~ நாள் முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம் ~ 07.30~08.00 AM & 04.30~ 05.30 PM .
ராகு காலம்~ மாலை 03.00~04.30
எமகண்டம்~ காலை 09.00~10.30
குளிகை ~ மாலை 12.00 ~ 01.30.
சூரிய உதயம்~ காலை 05.56 AM.
சூரிய அஸ்தமனuம்~ மாலை 06.25 PM.
குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும்.
சந்திராஷ்டமம்~ பூரம், உத்திரம்.
சூலம்~ வடக்கு.

இன்றைய (19-05-2020) ராசி பலன்கள்

மேஷம்

தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற புதிய வாய்ப்புகள் அமையும். அறிவாற்றலும், செயல் திறமையும் மேம்படும். வியாபாரத்தில் அபிவிருத்திகான சூழல் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

அஸ்வினி : வாய்ப்புகள் அமையும்.

பரணி : திறமைகள் மேம்படும்.

கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

புதிய அறிமுகம் கிடைக்கும். புதுவிதமான எண்ணங்களும், அதற்கான முயற்சிகளும் மேம்படும். பிள்ளைகளிடம் கனிவுடன் பழகவும். உறவினர்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

கிருத்திகை : முயற்சிகள் மேம்படும்.

ரோகிணி : கனிவு வேண்டும்.

மிருகசீரிஷம் : செல்வாக்கு உயரும்.

மிதுனம்

சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். மனதில் புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : முயற்சிகள் மேலோங்கும்.

திருவாதிரை : செல்வாக்கு உயரும்.

புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.

கடகம்

சகோதரர் வகையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். உத்தியோகம் சார்ந்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சபை தொடர்பான பணிகளில் அதிரடியான திட்டங்கள் மற்றும் மாற்றங்களை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : மனவருத்தங்கள் நீங்கும்.

பூசம் : அனுபவம் மேம்படும்.

ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.

சிம்மம்

எதிர்பாராத பயணங்கள் செல்ல நேரிடலாம். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அக்கம்-பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த முடிவுகளில் இழுபறியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : அலைச்சல்கள் ஏற்படலாம்.

பூரம் : அனுசரித்து செல்லவும்.

உத்திரம் : இழுபறியான நாள்.

கன்னி

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பயணங்களால் நன்மை கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : இலாபம் உண்டாகும்.

அஸ்தம் : நன்மை கிடைக்கும்.

சித்திரை : உறவுகள் மேம்படும்.

துலாம்

உயர் அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் வரும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பழைய பிரச்சனைகளால் ஒருவிதமான பதற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : அனுகூலமான நாள்.

சுவாதி : வெற்றி கிடைக்கும்.

விசாகம் : ஆதாயம் உண்டாகும்.

விருச்சகம்

நிர்வாகத்தில் தனித்திறமை புலப்படும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் அனுகூலமான நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : திறமைகள் புலப்படும்.

அனுஷம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.

கேட்டை : தேடல் உருவாகும்.

தனுசு

கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். உறவினர்களின் வழியில் மதிப்பு அதிகரிக்கும். வாகனத்தில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.

பூராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

உத்திராடம் : இலாபம் உண்டாகும்.

மகரம்

பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு அமைவதற்கான சூழல் அமையும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : கீர்த்தி உண்டாகும்.

திருவோணம் : உயர்வு கிடைக்கும்.

அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.

கும்பம்

உயர் அதிகாரிகளிடம் அமைதியுடன் செயல்படவும். பணியில் பொறுப்புகள் உயரும். வருங்காலம் சார்ந்த பணிகள் நிறைவேறும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய நபர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அவிட்டம் : அமைதி வேண்டும்.

சதயம் : பொறுப்புகள் உயரும்.

பூரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.

மீனம்

குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவான சூழல் அமையும். வர்த்தகம் சம்பந்தமான வியாபாரங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். விளையாட்டு வீரர்கள் கவனத்துடன் இருக்கவும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : ஆதரவான நாள்.

உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

ரேவதி : கவனம் வேண்டும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow