இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(14-06-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(14-06-2022)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(14-06-2022)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு 
வைகாசி 31 

1,#நாள்:செவ்வாய்கிழமை (14.06.2022)

2,#நட்சத்திரம்: கேட்டை 06:32 PM வரை பிறகு மூலம்

3,#திதி : 05:21 PM வரை பௌர்ணமி பின்னர் பிரதமை

4,#யோகம் : சித்த - அமிர்த யோகம்

5,#கரணம் : பவம்

நல்லநேரம் : காலை 7.30 - 8.30 / மாலை 4.30 - 5.30

#செவ்வாய்க்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை

சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

#இன்று: பௌர்ணமி

நல்ல நேரம்
07:30 - 08:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
07:30 - 08:30 மா / PM

இராகு காலம்
03.00 - 04.30
எமகண்டம்
09.00 - 10.30
குளிகை
12.00 - 01.30

சூலம்: வடக்கு
பரிகாரம்-பால்

#சந்திராஷ்டமம்
பரணி+கார்த்திகை

சம நோக்கு நாள்

#லக்னம்:ரிஷப லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 09

#சூரிய_உதயம்
Sun Rise 05:53 காலை / AM

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிறுசிறு அவமானங்கள் ஏற்படும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்‌ ‌. கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் ஈகோ  அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்

ரிஷபம்

ரிஷபம்:உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.‌ வியாபாரத்தில் பற்று, வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்

கடகம்

கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி உங்களை மதித்துப் பேசுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்:எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும் . புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள். 

கன்னி

கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.  புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தைரியம் கூடும் நாள்

துலாம்

துலாம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நிம்மதியான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நண்பர்கள் உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

தனுசு

தனுசு:குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப்பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்களின் விருப்பத்தை அறிந்து கொள்வீர்கள். பணவரவு உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். இனிமையான நாள்.

கும்பம்

கும்பம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். மதிப்புக் கூடும் நாள்.

மீனம்

மீனம்:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.  உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்