இன்றைய நாள் எப்பிடி-வியாழக்கிழமை(11-06-2020)

இன்றைய ராசி பலன்கள்,இன்றைய பஞ்சாங்கம்,astrology,சோதிடம்,ஜோதிடம்,என் ஜோதிடம்,rasi palan ,today rasipalan,ராசிபலன்,jothidam,மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம்,அதிர்ஷ்ட திசை ,அதிர்ஷ்ட எண் ,அதிர்ஷ்ட நிறம்

Jun 11, 2020 - 01:01
 0  138
இன்றைய நாள் எப்பிடி-வியாழக்கிழமை(11-06-2020)

இன்றைய பஞ்சாங்கமும், ராசிபலன்களும்

- ஜூன் 08, 2020

இந்த நாள் அனைவருக்கும் சுபீட்சமான நாளாக அமைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

இன்றைய  பஞ்சாங்கம்

09-06-2020, வைகாசி 27, செவ்வாய்க்கிழமை,

சதுர்த்தி திதி இரவு 07.39 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.

உத்திராடம் நட்சத்திரம் பகல் 02.00 வரை பின்பு திருவோணம்.

பிரபலாரிஷ்ட யோகம் பகல் 02.00 வரை பின்பு சித்த யோகம்.

நேத்திரம் – 2. ஜீவன் – 1.

சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30,


சுப ஹோரைகள் (நல்ல நேரம்) காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00, 10.00-12.00.


இன்றைய ராசிப்பலன் –  09.06.2020

மேஷம்
இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை கூடும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

கடகம்
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வேலைபளு குறையும்.

துலாம்
இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். நிதானத்தை கடை பிடிப்பதன் மூலம் விரயங்களை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்
இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் அனுகூலமான பலன் உண்டாகும்.

தனுசு
இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். கடன்கள் ஒரளவு குறையும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கப் பெறும்.

மகரம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். சேமிப்பு உயரும்.

கும்பம்
இன்று நீங்கள் உற்றார் உறவினர்களுடன் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தேடி வரும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் அனுகூலமான பலனை அடைய முடியும்.

மீனம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் எடுக்கும் காரியம் எளிதில் முடியும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow