பன்னிரெண்டு ராசிகளுக்குமான புத்தாண்டு ராசிபலன் 2020
பன்னிரெண்டு ராசிகளுக்குமான புத்தாண்டு ராசிபலன் 2020

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அமோகமான வருடமாக தான் பிறக்கப் போகிறது. சார்வரி வருடம் உங்களது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யப் போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த வருடத்தை தொடங்கலாம். எடுத்த காரியத்தில் நிச்சயம் வெற்றி உண்டு. உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேற போகிறது. பணவரவிற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. பண வரவு அதிகமாக இருந்தாலும், பிற்காலத்தில் தேவைப்படும் என்று சேமிப்பு செய்வது நல்லது. எல்லா வெற்றியையும் அடைய வேண்டுமென்றால் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மட்டும் சற்று மனதில் கொள்ளவேண்டும். முடிந்த வரை யாரிடமும் அனாவசியமான வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சொந்தத் தொழில் சிறப்பாக நடக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாகவே கிடைக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரை வாங்கும் நேரம் வந்துவிட்டது. உங்கள் அலுவலகத்தில் உங்கள் கை தான் ஓங்கி நிற்க போகிறது. இந்த வருடத்தின் இடைப்பட்ட காலத்தில் புது புது வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டும். நீங்கள் தான் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த வருடம் முழுவதும், முடிந்தவரை கடன் வாங்காமல் தவிர்த்துக் கொள்வது நல்லது. கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். கடனை நீங்கள் யாருக்காவது கொடுப்பதாக இருந்தாலும் உஷாராக இருந்து கொள்வது அவசியம். ஆக மொத்தத்தில் பண பரிமாற்றத்தின் போது விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
பரிகாரம்:
திங்கட்கிழமை தோறும் விநாயகர் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.
ரிஷபம்: -
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரச்சினைகள் அதிகமாக வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அஷ்டம சனி இருப்பதால் நாவடக்கம் தேவை. வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டி நிலவும். இருந்தாலும் கடினமான உழைப்பினால் உங்களது வெற்றிக் கொடியை நிலைநாட்டுவீர்கள். புதியதாக தொழில் தொடங்கலாம். அலுவலகத்தில் வேலைப்பளு சற்று அதிகமாகத்தான் இருக்கும். உங்கள் உடன் வேலை செய்பவர்களே, உங்களை பார்த்து பொறாமை படுவார்கள். உடன் வேலை செய்பவர்களிடம் மட்டும் சற்று ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அவர்களே உங்களுக்கு எதிரியாக மாறும் வாய்ப்பும் உள்ளது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து படிக்க வேண்டும். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் மன தைரியத்தோடு எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. உறவினர்களிடமும், தெரிந்தவர்களிடமும் அனாவசியமாக உங்கள் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றவர்களிடம் பழகும்போது எல்லையை தாண்டி பழகுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கை வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.
#மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சந்தோஷமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. இதுநாள்வரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் இந்த வருடம் நடந்து முடிந்துவிடும். உங்களின் சுய மரியாதை அதிகரிக்கும். இதுவரை ஏளனமாக பேசிய சொந்தங்கள் இப்போது உங்களை உயர்த்தி பேசப் போகிறது. கணவன்-மனைவிக்கிடையே மட்டும் சின்ன சின்ன சண்டை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சொந்த தொழிலில், புதிய முயற்சியில், வெற்றியடைவீர்கள். லாபம் அதிகரிக்கும். இது நாள் வரை அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் இந்த வருடம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். உங்கள் மேலதிகாரிகள் உங்களை பாராட்டும் அளவிற்கு திறமையாக செயல்பட போகிறீர்கள். சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது. பதவி உயர்வும் கிடைக்கப்போகிறது. சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்தாலும் வெற்றி இலக்கை நோக்கி சென்று கொண்டே இருப்பீர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எப்படிப்பட்ட வெற்றியை அடைந்தாலும் நாவடக்கம் மட்டும் தேவைப்படுகிறது. இல்லையென்றால் பிரச்சனையில் சிக்கி கொள்ள நேரிடும். நீங்கள் நல்லதுக்கு என்று நினைத்து சொன்னாலும், அது தவறாக போய் முடியும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். ஜாக்கிரதையாக பேசுங்கள். மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: வாரந்தோறும் சனிக்கிழமை அன்று அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனைத் தரும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு முன்னேற்றத்தைத் தரக்கூடிய வருடமாக தான் பிறக்கப் போகின்றது. உங்கள் முயற்சிகள் அனைத்தும் இந்த வருடம் நிறைவேறி, வெற்றிப் பாதையில் செல்லும். வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். பணவரவு சீராக இருக்கும். உங்களது பொருட்களை மட்டும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்களது அலுவலகப் பணியில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு ரகசிய விஷயங்களையும், உங்களுடன் பணிபுரிபவர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது. அனாவசியமாக ரகசியங்களை வெளியில் கூறுவதன் மூலம் உங்களுக்கு பிரச்சினை வரும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். சொந்தத் தொழிலை விரிவுபடுத்த, புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
குறிப்பாக அரசாங்க வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். கடக ராசிகாரர்கள் அரசாங்க வேலைக்காக வைக்கப்படும் தேர்வுகளை தைரியமாக எழுதலாம். பெண்களுக்கு இந்த வருடம் அமோகமான வருடமாக தான் அமையப் போகின்றது. தங்களது சேமிப்பின் மூலம் பல வகையான, விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பரிகாரம்: தினம் தோறும் முருகர் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.
சிம்மம்: -
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் யோகமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. இதுநாள் வரை கஷ்டப்பட்டு வந்த பல வகையான பிரச்சினைகளுக்கு இந்த வருடம் தீர்வு கிடைத்துவிடும். வருமானம் கணிசமாக உயரும். உங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை மட்டும் சற்று கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உறவினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் பிறக்கும். சொந்தத் தொழில் சற்று மந்தமாகத்தான் செல்லும். விடாமுயற்சி வெற்றியைத் தரும் என்பதை மறந்துவிடாதீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சம்பளமும் அதிகரிக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். நீங்கள் கடன் தொகைக்காக விண்ணப்பித்தால், கடன் கிடைக்கும். முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பிரச்சனை என்று வரும்போது மட்டும் அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்காமல், சற்று நிதானமாக சிந்தித்து முடிவெடுப்பது நல்ல பலனைத் தரும். பெண்களுக்கு இந்த வருடம் அமோகமாக இருக்கப்போகிறது. குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரம்:
தினம்தோறும் அம்மனை நினைத்து வீட்டிலேயே தீபமேற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் வெற்றியைத் தரும் வருடமாக தான் பிறக்கப் போகின்றது. உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றியை அடையும். சொத்துக்கள் வாங்குவது விற்பது என்றால் அதில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்தவரை பண பரிமாற்ற விஷயங்களில் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டியது அவசியம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சியில் வெற்றி அடைவீர்கள். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கதவை தட்டும். வாய்ப்பை நழுவ விடாதீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க நேரம் வந்துவிட்டது. வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் தொடங்கலாம். திருமணத்தடை நீங்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். உங்களுடைய அம்மாவின் உடல்நலனில் மட்டும் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த வருடம் சந்தோஷமான வருடமாக தான் அமையும். மன அமைதியான குடும்ப சூழ்நிலையை உருவாக்குவது, பெண்கள் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து நடந்து கொள்வது நல்லது.
பரிகாரம்:
தினம் தோறும் அனுமன் வழிபாடு மன வலிமையை அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு சந்தோஷமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. எந்த ஒரு செயல்பாட்டிலும் ஆர்வத்தோடு ஈடுபடும் நீங்கள், தைரியத்தோடு செயல்பட்டு வெற்றி அடைவதில் கில்லாடியாக திகழ்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சுபகாரியங்கள் கைகூடி வரும். இதுநாள்வரை குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. பண பரிமாற்றத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். அலுவலகப் பணி எப்பவும்போல செல்லும். முடிந்தவரை உடன் பணிபுரிபவர்களிடமும், மேல் அதிகாரிகளிடமும் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விட்டு, விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பல தடைகளைத் தாண்டித்தான் வெற்றி அடைய முடியும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்கள் முடிந்தவரை உங்களது வீட்டு விஷயத்தை அக்கம்பக்கத்தினரிடம் சொல்வதை தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது. வாகனங்களில் செல்லும்போது துலாம் ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்:
தினமும் பெருமாள் வழிபாடு மன அமைதியைத் தரும்.
விருச்சிகம்: -
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரக்கூடிய வருடமாக தான் அமையப் போகின்றது. பண வரவிற்க்கு எந்த ஒரு குறைபாடும் வராது. குடும்பதில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்துமே இந்த வருடம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். வெளிநாட்டில் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். எல்லா காரியங்களும் வெற்றியை நோக்கி செல்வதால் சற்று தலைகணம் மேலோங்குவது போல் தெரியும். முடிந்தவரை அலட்சியமான பேச்சையும், அனாவசியமான பேச்சையும் தவிர்த்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கப் போகும் நேரம் வந்துவிட்டது. நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும், எதிர்பார்த்த சம்பள உயர்வும், உங்களைத் தேடி வருவதால் மனமகிழ்ச்சியோடு உங்களது பணியை செய்து முடிப்பீர்கள். மொத்தத்தில் கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டு, பேச்சில் கவனம் இருந்தால் இந்த வருடம் முழுவதும் உங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. திருமணம் தடை நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க நேரம் காலம் வந்துவிட்டது. மொத்தத்தில் விருச்சக ராசி காரர்களுக்கு இந்த வருடம் மிக அற்புதமான பலனை தரக்கூடிய வருடமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
பரிகாரம்:
தினம் தோறும் விநாயகர் வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சந்தோஷமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. அனாவசியமாக யாரையும் நம்பி உங்கள் கையில் இருக்கும் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைத்து விடாதீர்கள். விரைவாக முடிய வேண்டிய வேலை கூட, உங்கள் கையிலிருந்து அடுத்தவர் கைக்கு மாறும் போது இழுத்தடிக்கும். அனாவசியமான வாக்குவாதத்தை தவிர்த்துக்கொள்வது நல்லது. நாவடக்கம் அவசியம் தேவை. வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் தொடங்கலாம். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொந்தத் தொழிலை விரிவு படுத்துவதில் அதிக ஆர்வம் காண்பீர்கள். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கும் கூடிய விரைவில் நல்ல வேலை கிடைத்துவிடும். உடல் நலத்தை கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக காலில் ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக அமையும். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரம்:
தினம்தோறும் சிவபெருமானை நினைத்து 5 நிமிடம் கண்களை மூடி தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு சந்தோஷமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சந்தோஷம் அதிகரிக்கும். வருமானம் சீராக இருந்தாலும், செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கன படுத்திக் கொள்ளுங்கள். கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். திடீர் பயணங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. முடிந்தவரை அனாவசியமான வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். சொந்தத் தொழில் சிறப்பாக செல்லும். அலுவலக பணியில் நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் உங்களுடைய பேச்சுக்கு நல்ல மரியாதை கிடைக்கும்.
தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு வாய்ப்பு உண்டு. தாராளமாக திருமண பேச்சினை தொடங்கலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் நிச்சயம் நல்ல செய்தி வந்து சேரும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. உயர்கல்விக்காக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். குடும்பத்தில் உள்ள பெண்கள் சூழ்நிலையை புரிந்து அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை அன்று முருகனை வழிபடுவது மன அமைதியைத் தரும்.
கும்பம்: -
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சந்தோஷமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. ஆரோக்கியம் சீராக இருக்கும். வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் சீராக இருக்கும். முடிந்தவரை செலவைக் குறைத்துக் கொண்டு எதிர்காலத்திலும், பணத் தேவை இருக்கும் என்பதை புரிந்து கொண்டு, சேமித்து வைப்பது மிகவும் நல்லது. ஏழரைச் சனி காரணமாக வேலையில் சில பிரச்சினைகள் வந்துபோகும். உஷாராக இருந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் அக்கறையோடு செயல்பட்டால் நல்ல லாபத்தை பெற முடியும். எந்த ஒரு முடிவையும் நன்றாக சிந்தித்து எடுக்க வேண்டியது அவசியம். கவனத்தோடு உங்களது பணியை செய்தால் சின்ன சின்ன பிரச்சனைகள் கூட வராமல் தப்பித்துக் கொள்ளலாம். புது வீடு வாகனம் வாங்கும் யோகம் கூட சிலருக்கு வரலாம். திருமண பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம். வீட்டில் உள்ள பெண்களுக்கு இந்த வருடம் சிறப்பான வருடமாக இருக்கப்போகிறது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.
பரிகாரம்:
சனிக்கிழமை தோறும் அனுமன் கோவிலுக்கு சென்று வெண்ணை வாங்கித்தந்து வழிபட்டால் நல்ல பலனைப் பெறலாம்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சந்தோஷமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. உங்களது எல்லா செயல்பாட்டிலும் வெற்றி அடையப் போகிறீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அலுவலகப் பணியில் உங்களைத் தேடி பல பொறுப்புகள் வரப்போகிறது. நிராகரிக்காமல் ஏற்றுக்கொண்டால் நிச்சயம் முன்னேற்ற பாதையில் செல்லலாம். வரவு சீராக இருந்தாலும், உங்கள் கையில் இருக்கும் பணத்தை விட செலவு அதிகமாக தான் இருக்கும். சுபச் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். முன்னேற்றப்பாதையில் செல்லும் யோகம் இருந்தாலும் சற்று உஷாராக நடந்துகொள்வது நல்லது. பெண்களுக்கு இந்த வருடம் சிறப்பான வருடமாக அமையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. முன் கோபத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுத்து விடாதீர்கள். பொறுமை தேவை என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் எல்லாம் சுமுகமாக நடக்கும்.
பரிகாரம்:
தினம்தோறும் முருகனை நினைத்து மனதார வேண்டிக் கொண்டால் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவு காலம் பிறக்கும்.
What's Your Reaction?






