இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(11-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(11-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(11-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – மார்கழி 27 - 

1,#நாள்:புதன்கிழமை - (11.1.2023)

2,#நட்சத்திரம் : மகம் 10:50 AM வரை பிறகு பூரம்

3,#திதி : 01:11 PM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி

4,#யோகம்: சித்த - அமிர்த யோகம்

5,#கரணம் : பாலவம் மதியம் 12:45 வரை பின்பு கௌலவம்

நல்லநேரம்: காலை 9.30 - 10.30 / மாலை 4.30 - 5.30

#புதன்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 - 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)

சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்

நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
12.00 - 01.30
எமகண்டம்
07.30 - 09.00
குளிகை
10.30 - 12.00

சூலம்:வடக்கு
பரிகாரம்-பால்

#சந்திராஷ்டமம்
திருவோணம்+ அவிட்டம்

#நாள்:கீழ் நோக்கு நாள்

#லக்னம்:தனுர் லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 44

சூரிய உதயம்
06:33 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:23 மாலை /

#நினைவு_தினம்

தியாகி திருப்பூர் குமரன் நினைவு தினம்

லால்பகதூர் சாஸ்த்திரி நினைவு தினம்

கெர்போட்ட நிவர்த்தி

தியாக பிரம்ம ஆராதனை 

#இன்றைய_ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, புது நட்பால் உற்சாகம் ஏற்படும். பண விவகாரத்தில் யாரையும் நம்ப வேண்டாம். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். எடுத்த சவாலில் வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். மன பாரம் குறையும். பிரியமானவர்கள் வழியில் நல்லது நடக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்

கடகம்

கடக ராசி நேயர்களே, புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு .

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம், வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, விருப்பங்கள் நாளடைவில் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். முன் கோபத்தை குறைக்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் பழகவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, சொந்த பந்தங்கள் உங்களை நாடி வருவர். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, குடும்ப நபர்களின் நன்மதிப்பை பெற முடியும். உடல் அசதி, மனச்சோர்வு நீங்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மகரம்

மகரம்: ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர் நண்பர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். தடைகள் ஏற்படும் நாள்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அநாவசிய செலவை கட்டுப்படுத்தவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.