இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(10-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(10-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(10-01-2023)

இன்றையப ஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – மார்கழி 26 - 

1,#நாள்:செவ்வாய்கிழமை (10.01.2023)

2,#நட்சத்திரம்: ஆயில்யம் 09:01 AM வரை பிறகு மகம்

3,#திதி : 11:29 PM வரை திருதியை பின்னர் சதுர்த்தி

4,#யோகம் : சித்த யோகம்

5,#கரணம் : பத்திரை காலை 11:10 வரை பின்பு பவம்

நல்லநேரம் : காலை 7.30 - 8.30 / மாலை 4.30 - 5.30

#செவ்வாய்க்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை

சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

#இன்று; சங்கடஹர சதுர்த்தி

நல்ல நேரம்
07:30 - 08:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
07:30 - 08:30 மா / PM

இராகு காலம்
03.00 - 04.30
எமகண்டம்
09.00 - 10.30
குளிகை
12.00 - 01.30

#சூலம்:வடக்கு
பரிகாரம்-பால்

#சந்திராஷ்டமம்
திருவோணம்

#நாள்:கீழ் நோக்கு நாள்

#லக்னம்:தனுர் லக்னம்
இருப்பு நாழிகை 00 வினாடி 55

சூரிய உதயம்
06:33 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:22 மாலை /

#தோற்றம்

1940 -கே.ஜே. ஜேசுதாஸ் 
இந்தியா பாடகர்/

விடுதலை போராட்ட வீரர்
டி.எம் காளியண்ணன் பிறந்த தினம்

1933 கி.கஸ்தூரி ரங்கன் 
எழுத்தாளர் 

1974 ஹிருத்திக் ரோஷன் இந்தி நடிகர் 

#மறைவு

தாவரவியாளர் கரோலஸ் லின்னோயஸ் நினைவு தினம்

ஆர்.எஸ் மனோகர் பழம்பெரும் நடிகர்

பாண்டியன் தமிழ் நடிகர் 

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, சாட்சி கையெழுத்து போட வேண்டாம். மனதில் உள்ள குழப்ப நிலை மாறும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்துடன் இன்றைய பொழுது நல்லவிதமாக கழியும். மனதில் ஏற்பட்ட சந்தேகத்திற்கு தீர்வு கிடைக்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். செய்தொழில் விருத்தியடையும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடகம்

கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பண வரவில் சிறிய தடை ஏற்படும். நெருங்கிய உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளவும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, புத்திசாதூரியத்தால் வரும் தடைகளை தகர்த்தெறிய முடியும். பயணங்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் பொறுமை அவசியம். உத்யோகத்தில் மதிப்பு கூடும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். திட்டமிட்ட காரியங்களை உடனுக்குடன் செய்ய முடியும். வாகன பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, பழைய சிக்கலை தீர்க்க புது வழி கிடைக்கும். பெற்றோர்களிடம் சின்ன மனஸ்தாபம் வந்து போகும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் வரும். அடுத்தவர்களிடம் உதவி கேட்ட தயக்கம் ஏற்படும். பிராத்தனைகள் நிறைவேறும். உத்யோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, ஆன்மிகம் எண்ணம் மேலோங்கும். புது நண்பர்கள் அறிமுகமாவர். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிரியமானவர்கள் சந்திப்பால் மகிழ்ச்சியை தரும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் தேவை

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் இருந்த சண்டை சச்சரவு நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, மனதில் உள்ள திட்டங்களை நிறைவேறும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்