இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-சனிக்கிழமை(07-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-சனிக்கிழமை(07-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-சனிக்கிழமை(07-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – மார்கழி 23 - 

1,#நாள்:சனிக்கிழமை (07.1.2022)

2,#நட்சத்திரம் : நாள் முழுவதும் புனர்பூசம்  பிறகு பூசம்

3,#திதி : பிரதமை நாள் முழுவதும்

4,#யோகம் : சித்த யோகம்

5,#கரணம் : பாலவம் மாலை 05:50 வரை பிறகு கௌலவம்

நல்லநேரம் : காலை 7.30 - 8.30 / மாலை 4.30 - 5.30

#சனிக்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
(காலை 7 முதல் 7 1/2, 10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை, 5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை, 9 முதல் 10 வரை)

சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

நல்ல நேரம்
07:30 - 08:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
09:30 - 10:30 மா / PM

இராகு காலம்
09.00 - 10.30
எமகண்டம்
01.30 - 03.00
குளிகை
06.00 - 07.30

#சூலம்:கிழக்கு
பரிகாரம்-தயிர்

#சந்திராஷ்டமம்
மூலம்

நாள்: சம நோக்கு நாள்

#லக்னம்: தனுர் லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 28

சூரிய உதயம்
06:32 காலை /
சூரிய அஸ்தமனம்
06;21 மாலை /

#தோற்றம்

1938 :நடிகை சரோஜாதேவி பிறந்த தினம்

1953 :நடிகர் பாக்கியராஜ் பிறந்த தினம்

1972 : எஸ் பி பி சரண் 
பாடகர் /நடிகர் பிறந்த தினம்

1948 :சோபா டே இந்தியா எழுத்தாளர் பிறந்த தினம்

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, பொருளாதார நிலை சீராக இருக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். சில மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, குடும்ப செல்வாக்கு உயரும். பயணத்தின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். திருமண காரியம் கைகூடும். சொந்த தொழில் மேன்மை அடையும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, அந்நியர்களால் பண விரயமும், வீண் அலைச்சலும் ஏற்படும். புது வீடு மாறும் எண்ணம் வரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உத்யோக மாற்றம் உண்டு.

கடகம்

கடக ராசி அன்பர்களே, குல தெய்வ வழிபாடு நன்மையை தரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகமாகும். அடுத்தவர் மனம் வருந்தும்படி பேச வேண்டாம். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, புதிய முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். பெற்றோர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். உடல் நலம் சீர் பெரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே, நினைத்த வேகத்தில் காரியங்களை முடிக்க முடியும். பண விவகாரங்களில் கவனம் தேவை. பிரியமானவர்கள் உதவி கரம் நீட்டுவர். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வரவுக்கு மீறிய செலவுகள் வரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, குடும்பத்தில் இருந்த குழப்ப நிலை நீங்கும். சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கூடுதல் கவனம் தேவை 

மகரம்

மகர ராசி அன்பர்களே, எதிலும் பதறாது செயல்படுவதன் மூலம் வெற்றி கிட்டும். தூரத்து பயணங்களை தவிர்க்கவும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, புது பொருள் சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பெண்கள் வகையில் சில தொந்தரவுகள் வரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே, மனதில் இருந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்யோகத்தில் அலைச்சல்