இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(05-04-2020)
இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(05-04-2020)
இன்றைய பஞ்சாங்கம்
இன்றைய ராசி பலன்
#மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியான விஷயங்களில் மன உளைச்சல் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும்.
#ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். தேவையற்ற செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
#மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்.
#கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன்கள் அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
# சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும்.
#கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
#துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் தாமதமானாலும் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
# விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். பணபற்றாக்குறை நீங்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
# தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் சீராக இருக்கும்.
#மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். வேலையில் தேவையற்ற பிரச்சினையால் மன உளைச்சல் உண்டாகலாம். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
#கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் சக தொழிலாளர்களால் அனுகூலம் கிட்டும். பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் சிறப்பாக சமாளிப்பீர்கள்.
#மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வேலை சம்பந்தமான புதிய மாற்றங்களால் அனுகூலப் பலன் கிட்டும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடையலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும். ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது.
What's Your Reaction?