இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(04-05-2020)

இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(04-05-2020)

May 4, 2020 - 01:13
 0  190
இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(04-05-2020)


#இன்றையபஞ்சாங்கம்

4-#மே-2020
#சூரியோதயம்    : 6:01 am #சந்திரௌதயம்   : 03:40 pm
#சூரியாஸ்தமனம் : 6:31 pm #சந்திராஸ்தமனம் : 04:10 am
#சூரியன்ராசி   : மேஷம்
#சந்திரன்ராசி  :   கன்னி
#மாதம் :சித்திரை 21"ம் நாள்
#பக்ஷம்    : சுக்ல பக்ஷம்

#பஞ்சாங்கம்

1️⃣,#வாரம்    : திங்கள்

2️⃣,#திதி     : ஏகாதசி இறுதி 06:13 am துவாதசி

3️⃣,#நட்சத்திரம் : உத்திரம் இறுதி 07:19 pm அஸ்தம்

4️⃣,#யோகம்    : வியாகதம் இறுதி 08:36 am அரிசணம்

5️⃣,#கரணம்    :பத்திரை 06:13 am 
பவம் 04:35 pm
பாலவம் 04:35 pm

#நல்ல_நேரம்     

அபிஜித்    : 11:51 am – 12:41 pm

அமிர்த காலம்     : 12:50 pm – 02:16 pm

ஆனந்ததி யோகம் : 07:19 pm 

#கெட்ட_நேரம்

ராகுகாலம்   : 8:35 am – 9:51 am

யம கண்டம் : 11:08 am – 12:25 pm

தியாஜ்யம்   : 04:12 am – 05:38 am

குளிகன்      : 1:41 pm – 2:58 pm

#துர்முஹுர்த்தம் 

1. 12:45 pm – 01:26 pm 
2. 02:48 pm – 03:29 pm

#நாள்_முழுவதும் #சித்தயோகம். 
நேத்திரம் – 2. ஜீவன் – 1. #அக்னி_நட்சத்திரம் ஆரம்பம் காலை 08.57 மணிக்கு சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

#சுப_ஹோரைகள் மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, 
மாலை06.00 -08.00,  
இரவு 10.00-11.00

#சந்திராஷ்டமம்
#பூரட்டாதி

இன்றைய ராசி பலன்

#மேஷம் 
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார நிலை மந்தமாக
இருப்பதால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படலாம். கணவன்-மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் விலகி குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடலில் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.

# ரிஷபம் 
 ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்-மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி இருக்கும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

# மிதுனம்
 மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் முடிந்த வரை உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்-மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, விட்டு கொடுத்து செல்வது, பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். கடன் தொல்லை குறையும்.

#கடகம் 
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி புது உற்சாகத்துடனும் தெம்புடனும் செயல்பட்டு முன்னேற்றம் அடைவார்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். 

#சிம்மம்
 சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் சாதகமாகச் செயல்படுவார்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறலாம். 

#கன்னி
 கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் அவர்களுடன் பழகும் போது பேச்சில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் நிலையில் ஏற்படும் சோர்வு மற்றும் கை கால் வலியால் அன்றாட பணிகளை கூட செய்ய சிரமபட வேண்டியிருக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்-வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

# துலாம்
 துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கொடுத்த கடன்களும் வசூலாகும். 

#விருச்சிகம் 
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்வதில் எந்த பாதிப்பும் இருக்காது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களும் வசூலாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். 

#தனுசு 
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்-மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். 

#மகரம் 
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் நிலையில் சிறுசிறு ஆரோக்கிய குறைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. கொடுக்கல்-வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை குறைப்பதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றமான நிலை இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

# கும்பம்
 கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வெளி தொடர்புகளால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். எதிலும் நிதானமாக செயல்படுவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

 #மீனம் 
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை பெற முடியும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சிறு தடை தாமதம் உண்டாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow