இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(03-02-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(03-02-2023)

 0  30
இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(03-02-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – தை 20 

1,*#நாள்*: வெள்ளிக்கிழமை (03.02.2023)

2,*#நட்சத்திரம்* : புனர்பூசம் நாள் முழுவதும்

3,*#திதி* : 07:58 PM வரை திரயோதசி பின்னர் சதுர்தசி

4,*#யோகம்* : சித்த யோகம்

5,*#கரணம்* : தைதுலம்
நல்லநேரம் : காலை : 9.30 - 10.30 / மாலை 4.30 - 5.30

*#வெள்ளிக்கிழமை* 
சுபஹோரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை

சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

*#இன்று*:சுபமுகூர்த்த நாள்
பிரதோஷம்

நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
10.30 - 12.00
எமகண்டம்
03.00 - 04.30
குளிகை
07.30 - 09.00

*#சூலம்*: மேற்கு
பரிகாரம்+வெல்லம்

*#சந்திராஷ்டமம்*
மூலம்

*#நாள்*:மேல் நோக்கு நாள்

*#லக்னம்*:மகர லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 48

சூரிய உதயம்
06:36 காலை / AM
சூரிய அஸ்தமனம்
06:35 மாலை /

அறிஞர் அண்ணா நினைவு தினம்

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் குதூகலம் நிறையும். பிரியமானவர்கள் வழியில் சில செலவுகள் உண்டாகும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் நிதானமாக செயல்படவும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவும். தேக பலம் கூடும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். அடுத்தவரின் ஆலோசனைக்கு செவி சாய்க்க வேண்டாம். நட்பால் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிட்டும். எதிரிகள் அடிபணிந்து போவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டு. கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். மனக்கவலைகள் அடியோடு மறையும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்

துலாம்

துலாம் ராசி நேயர்களே, புதியவர்கள் நண்பர்களாவர். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப சிக்கல்கள் வெகுவாக குறையும். வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, திட்டமிட்ட காரியம் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். மன பாரம் பாதியாக குறையும். முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் 
கவனமும் நிதானமும் அவசியம்

மகரம்

மகர ராசி நேயர்களே, குடும்ப கௌரவத்தை உயர்த்த முடியும். நவீன பொருள் சேர்க்கை ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, குடும்ப ஒற்றுமை உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். உறவினர்கள் வழியில் சில தொந்தரவு இருக்கும். வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow