திருக்குறள் - குறள் 633
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அமைச்சியல். அதிகாரம்: அமைச்சு.
திருக்குறள் - குறள் 633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்.
மு.வரதராசனார் உரை:
பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.
சாலமன் பாப்பையா உரை:
நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.
பரிமேலழகர் உரை:
பிரித்தலும் - வினை வந்துழிப் பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும்; பேணிக்கொளலும் - தம்பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக்கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும் - முன்னே தம்மினும் தம் பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்
மணக்குடவர் உரை:
மாற்றரசரிடத்து உள்ளாரையும் நட்பாகிய அரசரையும் அவரிடத் தினின்று பிரித்தலும், அவ்வாறு பிரிக்கப்பட்டாரை விரும்பித் தம்மிடத்துக் கொளலும், தம்மிடத்து நின்று பிரிந்தாரைக் கூட்டிக் கொளலும் வல்லவன் அமைச்சனாவான்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தக்க காலத்தில் பிரிக்க வேண்டியவர்களைப் பிரித்தலும், வேண்டியவர்களை நன்கு ஆதரித்துப் பிரியாமல் வைத்துக் கொள்ளலும், பிரிந்தவர்களைப் பொறுத்த வேண்டின் பொருத்தலும் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.
Translation:
A minister is he whose power can foes divide,
Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.
Explanation:
The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him).
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்