Skip to content

Popular

திருக்குறள் - குறள் 634

குறள் பால்:
பொருட்பால்
குறள் இயல்:
அமைச்சியல்
அதிகாரம்:
அமைச்சு
குறள் 634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.
— திருவள்ளுவர் · அமைச்சு
WhatsApp

திருக்குறள் - குறள் 634 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.

மு.வரதராசனார் உரை

(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

பரிமேலழகர் உரை

தெரிதலும் - ஒருகாரியச் செய்கை பலவாற்றால் தோன்றின் அவற்றுள் ஆவது ஆராய்ந்தறிதலும்; தேர்ந்து செயலும் - அது செய்யுங்கால் வாய்க்கும் திறன் நாடிச் செய்தலும்; ஒருதலையாச் சொல்லுதலும் - சிலரைப் பிரித்தல் பொருத்தல் செயற்கண், அவர்க்கு இதுவே செயற்பாலது என்று துணிவு ப

மணக்குடவர் உரை

ஒருவினையை நன்றாக ஆராய்தலும், அதனைச் செய்ய நினைத்தால் முடியுமாறெண்ணிச் செய்தலும், ஐயமாகிய வினையைத் துணிந்து சொல்லுதலும் வல்லவன் அமைச்சனாவான்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

செய்தொழிலில் ஆவன ஆராய்ந்து தெரிதலும், செய்யும் பொது வாய்க்கும் திறத்தினை நாடிச் செய்தலும், திட்டமிட்டுச் செய்ய வேண்டியவற்றை முடிவாகச் சொல்லலும் ஆகிய இவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.

Translation

A minister has power to see the methods help afford,
To ponder long, then utter calm conclusive word.

Explanation

The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity).

திருக்குறள் - குறள் 634
திருக்குறள் ஓவியம் - குறள் 634
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 64: அமைச்சு