திருக்குறள் - குறள் 196
- குறள் பால்:
- அறத்துப்பால்
- குறள் இயல்:
- இல்லறவியல்
- அதிகாரம்:
- பயனில சொல்லாமை
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
திருக்குறள் - குறள் 196 உரை
கலைஞர் மு.கருணாநிதி உரை
பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.
மு.வரதராசனார் உரை
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.
பரிமேலழகர் உரை
பயன்இல்சொல் பாராட்டுவானை மகன் எனல் - பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க, மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக. (அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'ம
மணக்குடவர் உரை
பயனில்லாதவற்றைப் பலர் முன்பு கூறுதல், விருப்பமில்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினுந் தீதே, இது பயனில சொல்லல் இம்மை மறுமை யிரண்டின் கண்ணுந் தீமை பயக்கு மென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை
பயனில்லாத சொற்களைப் பலகாலும் பாராட்டிப் பேசுபவனை மனிதன் என்று கூறாதே; மக்களுக்குள்ளே பதர் என்று சொல்லுக.
Translation
Who makes display of idle words' inanity,
Call him not man, -chaff of humanity!.
Explanation
Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this kural.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அதிகாரம் 20: பயனில சொல்லாமை
குறள் 191 பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
குறள் 192 பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது.
குறள் 193 நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.
குறள் 194 நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து.
குறள் 195 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.
குறள் 197 நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று.
குறள் 198 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.
குறள் 199 பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.
குறள் 200 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.