திருக்குறள் - குறள் 1279

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல்.


திருக்குறள் - குறள் 1279


தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

மு.வரதராசனார் உரை:
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வர

பரிமேலழகர் உரை:
(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி - அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி ந


மணக்குடவர் உரை:
தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது. அது - உடன்போக்கு.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தன தோள் வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கி, தனது அடிகளையும் நோக்கி, அவ்வாறு அப்போது அவள் செய்தாள். அவள் செய்தது அவ்வளவேயாகும்.

Translation:
She viewed her tender arms, she viewed the armlets from them slid;
She viewed her feet: all this the lady did.

Explanation:
She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்