Skip to content

Popular

திருக்குறள் - குறள் 1276

குறள் பால்:
காமத்துப்பால்
குறள் இயல்:
கற்பியல்
குறள் 1276
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.
— திருவள்ளுவர் · குறிப்பறிவுறுத்தல்
WhatsApp

திருக்குறள் - குறள் 1276 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.

மு.வரதராசனார் உரை

பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.

பரிமேலழகர் உரை

(தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்

மணக்குடவர் உரை

ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவுடைத்து. இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

நம் பிரிவினால் உண்டான துன்பத்தினைப் பொறுத்திருந்து பிறகு மகிழும் வண்ணம் கணவர் திரும்பிவந்து கலக்கின்ற கலவி மேலும் அத்துன்பத்தினைப் பொறுத்திருந்து அவரது அன்பில்லாத் தன்மையினை நினைக்கும் தன்மையுடையது.

Translation

While lovingly embracing me, his heart is only grieved:
It makes me think that I again shall live of love bereaved.

Explanation

The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.

திருக்குறள் - குறள் 1276
திருக்குறள் ஓவியம் - குறள் 1276
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 128: குறிப்பறிவுறுத்தல்