Skip to content

Popular

திருக்குறள் - குறள் 1273

குறள் பால்:
காமத்துப்பால்
குறள் இயல்:
கற்பியல்
குறள் 1273
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.
— திருவள்ளுவர் · குறிப்பறிவுறுத்தல்
WhatsApp

திருக்குறள் - குறள் 1273 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

மு.வரதராசனார் உரை

( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை

கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) மணியில் திகழ்தரும் நூல்போல் - கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு. (அணி - புணர்ச்சியான் ஆய அழகு.

மணக்குடவர் உரை

கோவைப்பட்ட நீலமணியின்கண்ணே தோற்றுகின்ற நூல்போல, இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உணடு. அழகு - புணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

கோக்கப்பட்ட பளிங்கு மணிக்குள் கிடந்து வெளியில் புலப்படுகின்ற நூல்போல் இப்பெண்ணின் அழகினுக்குள்ளிருந்து வெளியில் புலப்படுவதொரு குறிப்பு இருக்கின்றது.

Translation

As through the crystal beads is seen the thread on which they 're strung
So in her beauty gleams some thought cannot find a tongue.

Explanation

There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.

திருக்குறள் - குறள் 1273
திருக்குறள் ஓவியம் - குறள் 1273
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 128: குறிப்பறிவுறுத்தல்