திருக்குறள் - குறள் 1278
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல்.
திருக்குறள் - குறள் 1278
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.
மு.வரதராசனார் உரை:
எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
சாலமன் பாப்பையா உரை:
என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) எம் காதலர் சென்றார் நெருநற்று - எம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனி பசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம். ('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்
மணக்குடவர் உரை:
எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம். இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எம் காதலர் நேற்றுதான் பிரிந்து போனார். அப்பிரிவினால் யாமும் மேனி பசந்து பல நாட்கள் உடையேம் ஆனோம்.
Translation:
My loved one left me, was it yesterday?
Days seven my pallid body wastes away!.
Explanation:
It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்