திருக்குறள் - குறள் 1167

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: படர்மெலிந்திரங்கல்.


திருக்குறள் - குறள் 1167


காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்.

மு.வரதராசனார் உரை:
காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.

பரிமேலழகர் உரை:
('காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்', என்றாட்குச் சொல்லியது) காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் - காமமாகிய கடல் நீந்தாதேனல்லேன், நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்; யாமத்தும் யானே உளேன் - அக்காணாமைக் காலந்தான் எல்லோரும் துயிலும் அரையிருளாயிற்று, அ


மணக்குடவர் உரை:
காமமாகிய பெருக்காற்றினை நீந்திக் கரை காண்கின்றிலேன். அரையிருள் யாமத்தினும் உறங்காது யானேயுளேன் மற்று உறங்காதாரில்லை இதுகாதலர் குறித்தநாள் வருந்துணையும் ஆற்றுமாறு என்னையென்று தலைமகள் தன்னுள்ளே சொல்லியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காமமாகிய கடலைக் கடந்து கரையினைக் காண முடியாதவளானேன். பாதி இரவிலும் யானே துணையின்றி இருக்கின்றேன். இறவாது இருக்கின்றேன்.

Translation:
I swim the cruel tide of love, and can no shore descry,
In watches of the night, too, 'mid the waters, only I!.

Explanation:
I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்