திருக்குறள் - குறள் 1170

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: படர்மெலிந்திரங்கல்.


திருக்குறள் - குறள் 1170


உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

மு.வரதராசனார் உரை:
காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா உரை:
என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.

பரிமேலழகர் உரை:
(நின் கண்கள் பேரழகு அழிகின்றனவாகலின் அழற்பாலையல்லை, என்றாட்குச் சொல்லியது.) உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் - மனம் போலக் காதலருள்ள தேயத்துக் கடிதிற்செல்ல வல்லன ஆயின், என் கண் வெள்ளநீர் நீந்தல - என கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய தம் நீரை நீந்தா. (அது மாட்டாமை


மணக்குடவர் உரை:
அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லனவாயின், வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தா. இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மனம்போலக் காதலருள்ள இடத்திற்குக் கடிதிற் செல்ல வல்லவையானால் என் கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய நீரை நீந்தாதிருக்கும்.

Translation:
When eye of mine would as my soul go forth to him,
It knows not how through floods of its own tears to swim.

Explanation:
Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்