திருக்குறள் - குறள் 1108
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: புணர்ச்சிமகிழ்தல்.
திருக்குறள் - குறள் 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.
மு.வரதராசனார் உரை:
காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.
பரிமேலழகர் உரை:
(ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்ற தொக்கும்) வளி இடை போழப்படா முயக்கு - ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்; வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர் விழைவார
மணக்குடவர் உரை:
ஒத்த காதலுடையா ரிருவர்க்கும் இனிதாம்; காற்றால் இடை யறுக்கப்படாத முயக்கம். இது புணர்ச்சி விருப்பினால் கூறினமையால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று. இது குறிப்பினால் புகழ்ந்தது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒரு பொழுதும் நெகிழமையால் காற்று இடையில் புகாமல் தழுவுதல் ஒருவரையொருவர் விரும்புகின்ற இருவர்க்கும் இன்பம் தருவதாகும்.
Translation:
Sweet is the strict embrace of those whom fond affection binds,
Where no dissevering breath of discord entrance finds.
Explanation:
To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்