Skip to content

Popular

திருக்குறள் - குறள் 1080

குறள் பால்:
பொருட்பால்
குறள் இயல்:
குடியியல்
அதிகாரம்:
கயமை
குறள் 1080
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
— திருவள்ளுவர் · கயமை
WhatsApp

திருக்குறள் - குறள் 1080 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.

மு.வரதராசனார் உரை

கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை

தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?.

பரிமேலழகர் உரை

கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர் - கயவர் தம்மை யாதானும் ஒரு துன்பமுற்றக்கால் அதுவே பற்றுக்கோடாக விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றற்கு உரியர்; எற்றிற்கு உரியர் - அதுவன்றி வேறு எத்தொழிற்கு உரியர்? (உணவின்மையாகப் பிறிதாக ஒன்று வந்து உற்ற துணைய

மணக்குடவர் உரை

கயவர் யாதினுக்கு வல்லரெனின், தமக்கு ஒரு துன்பமுற்றால் விரைந்து தம்மை விற்க வல்லவர். இது நிலையிலர் என்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

கயவர் தமக்கு யாதானுமொரு துன்பம் வந்தபோது தம்மைப் பிறர்க்கு விரைவாக விற்றற்கு உரியர். அதுவன்றி வேறு இத்தொழிலுக்கு உரியர்?.

Translation

For what is base man fit, if griefs assail?
Himself to offer, there and then, for sale!.

Explanation

The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?.

திருக்குறள் - குறள் 1080
திருக்குறள் ஓவியம் - குறள் 1080
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 108: கயமை