Skip to content

Popular

திருக்குறள் - குறள் 1074

குறள் பால்:
பொருட்பால்
குறள் இயல்:
குடியியல்
அதிகாரம்:
கயமை
குறள் 1074
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
— திருவள்ளுவர் · கயமை
WhatsApp

திருக்குறள் - குறள் 1074 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்.

மு.வரதராசனார் உரை

கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.

சாலமன் பாப்பையா உரை

தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.

பரிமேலழகர் உரை

கீழ் - கீழாயினான்; அகப்பட்டி ஆவாரைக் காணின் - தன்னிற்சுருங்கிய பட்டியாய் ஒழுகுவாரைக் கண்டானாயின்; அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் - அவ்வொழுக்கத்தின்கண் அவரின் தான் மேம்பட்டு அதனால் தன் மிகுதிகாட்டி இறுமாக்கும். (அகப்பட்டி: அகமாகிய பட்டி, பட்டி போன்று வேண

மணக்குடவர் உரை

மனையகத்திருந்து பொற்புடையராகிய பெண்டிரைக் காணின், அவரினும் மிகப் பொற்புடையாராய் அதனைப் பெற்றேமென்று இறுமாப்பர் கயவர். இது நிறையிலரென்றது.

Translation

When base men those behold of conduct vile,
They straight surpass them, and exulting smile.

Explanation

The base feels proud when he sees persons whose acts meaner than his own.

திருக்குறள் - குறள் 1074
திருக்குறள் ஓவியம் - குறள் 1074
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 108: கயமை