திருக்குறள் - குறள் 1044
- குறள் பால்:
- பொருட்பால்
- குறள் இயல்:
- குடியியல்
- அதிகாரம்:
- நல்குரவு
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
திருக்குறள் - குறள் 1044 உரை
கலைஞர் மு.கருணாநிதி உரை
இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.
மு.வரதராசனார் உரை
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.
பரிமேலழகர் உரை
இற்பிறந்தார்கண்ணேயும் - இளிவந்த சொற்பிறவாத குடிப்பிறந்தார் மாட்டேயும்; இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு இன்மை தரும் - அது பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும். (சிறப்பு உம்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது. இளிவந்த சொல் - இளிவருதற்கு ஏதுவாக
மணக்குடவர் உரை
நல்குரவு, குடிப்பிறந்தார்மாட்டேயும் இளிவரவான சொற்கள் பிறக்குஞ் சோர்வினை உண்டாக்கும்.
Translation
From penury will spring, 'mid even those of noble race,
Oblivion that gives birth to words that bring disgrace.
Explanation
Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this kural.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அதிகாரம் 105: நல்குரவு
குறள் 1041 இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது.
குறள் 1042 இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்.
குறள் 1043 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை.
குறள் 1045 நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்.
குறள் 1046 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்.
குறள் 1047 அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்.
குறள் 1048 இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு.
குறள் 1049 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.
குறள் 1050 துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று.