தம்பியை வைத்து அடுத்த படத்திற்கு தயாராகும் செல்வராகவன். டைட்டிலை மீண்டும் உறுதி செய்துள்ளார் .

Sep 4, 2021 - 05:34
Sep 5, 2021 - 04:35
 0  41
தம்பியை வைத்து அடுத்த படத்திற்கு தயாராகும் செல்வராகவன். டைட்டிலை மீண்டும் உறுதி செய்துள்ளார் .

தமிழ் சினிமாக்களில் முதன்மை இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். காதல் கொண்டேன் 7/G ரெயிண்போ காலனி ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் உலகம் NGK என இவரின் படங்கள் அனைத்தும் பல காலத்திற்கும் நின்று பேசும் வண்ணம் இருக்கும்.

என்னதான் காலம் கடந்து கொண்டாடப்பட்டாலும் தியேட்டர் உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரிான் எதி்பார்ப்பும் அப்போதைய வெற்றியையை மட்டுமே கவனிக்கும். காரணம் விமர்சன ரீதியில் வென்றாலும் வர்த்தக ரீதியிலான வெற்றிகளே படைப்பை வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

இயக்குனர் மாதேஸ்வரனின் கைவண்ணத்தில் உருவாகும் சாணிக்காகிதம் என்கிற படத்தின் வாயிலாக நாயகனாக அவதாரம் எடுக்கிறார் இயக்குனர் செல்வராகவன். ஏற்கனவே இயக்குனராய் இருந்து நடிகராக வலம் வந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா சுந்தர்.சி ராம் மிஷ்கின் வரிசையில் இப்போது இயக்குனர் செல்வராகவனும் இணைந்துள்ளார்.

இப்போது நடிக்கும் சாணிக்காகிதம் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் படத்தில் இவர்கள் இருவரும் வழிப்பறிக் கொள்ளையர்களாக நடித்துள்ளதாகவும் தகவல். மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர்கள் பெரும் வைரலாகியிருந்தது.

இந்நிலையில் இந்த போஸ்டர்களை பார்த்த நெல்சனோ தான் நடிகர் விஜயை வைத்து இயக்கும் பீஸ்ட் படத்திற்காக பேசியுள்ளார். என்னதான் நடிகராக அறிமுகம் கண்டாலும் இயக்கத்தில் தான் இருக்கும் நிலையை தக்கவைக்க அவ்வப்போது சில அப்டேட்களை தந்து வருகிறார்.

அந்த வகையில் அடுத்ததாய் தனுஷை வைத்து நானே வருவேன் படம் இயக்கப் போவதாக மீண்டும் உறுதி செய்துள்ளார். இதற்கான டைட்டிலை தற்போது வரை மாற்றவில்லை என்பது இவர் பதிவின் மூலம் தெளிவாக தெரிகிறது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow