இறால் நூடுல்ஸ் செய்வது எப்படி ?

இறால் நூடுல்ஸ் செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள்  

அவித்த நூடுல்ஸ்- ஒரு கப்
இறால்- 100 கிராம்
முட்டை-2
வெங்காயம்- 2
தக்காளி-2
பச்சைமிளகாய்-2
இஞ்சி பூண்டு- 3 ஸ்பூன்
தக்காளி சாஸ்- 3 குழிகரண்டி
சோயா சாஸ்- 2 ஸ்பூன்
ரெட்சில்லி சாஸ்-1 குழிகரண்டி
அஜினோமோட்டொ- ஒரு பின்ச்
வினிகர்-2 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
என்ணெய்-தாளிக்க

செய்முறை

1. முட்டையை தனியே பொடிமாஸ் போல் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

2. கடாயில் எண்ணெய் விட்டு பச்சைமிளயா, வெங்காயம் சேர்த்துவதக்கவும்.

3. இஞ்சிபூண்டு சேர்த்து பச்சை வாசனை போனதும் இறால் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

4. பின்னர் உப்பு, அஜினோமோட்டோ,வினிகர், சாஸ் வகைகளை சேர்த்து இறால் வேகும் வரை மூடிவிடவும். (இந்த கலவை க்ரேவி போல் இருக்க வேண்டும்)

5. பின்னர் நூடுல்ஸ் மற்றும் முட்டை சேர்த்து மசாலா நூடுல்ஸில் ஒரு சேர ஆகும் வரை கலக்கவும்.

6. பின் இறக்கி பரிமாறவும்.