ஆரஞ்சு ஐஸ் செய்து சாப்பிடுங்கள் .

சிறிய ரக ஆரஞ்சு - 7 அல்லது 8
சீனி - 1/4 கப்
தண்ணீர் - 1/4 கப்
எலுமிச்சை - 1 (சிறியது)
ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சை தோல் உரித்து விதை நீக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரும் சீனியும் சேர்த்து கரைந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.
உரித்த ஆரஞ்சுகளை பருப்பு மத்து அல்லது குழிக்கரண்டியின் பின்புறத்தை வைத்து நன்கு அழுத்தி சாறு எடுக்கவும். எடுத்த சாறை ஒரு வடிகட்டி வைத்து மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும்.
ஆரஞ்சு சாறுடன் எலுமிச்சை சாறு, சீனி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள ஆரஞ்சு சாறை ஐஸ் மோல்டில் ஊற்றி ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும். 8 மணி நேரம் கழித்து குழாயில் ஓடும் நீரில் மோல்டை காட்டி ஐஸ்களை வெளியே எடுக்கவும். சுவையான ஆரஞ்சு ஐஸ் தயார்
What's Your Reaction?






