ஆண்களை வெள்ளையாக்கும் இயற்கையான முறைகள்.

Dec 18, 2021 - 11:23
 0  312
ஆண்களை வெள்ளையாக்கும் இயற்கையான முறைகள்.

பொதுவாக ஆண்களும் பெண்களை போல் வெள்ளையாக வேண்டும் என்ற ஆசை உள்ளது.

ஆண்கள் வெளிப்படையாக தங்கள் அழகின் மீது அக்கறை காட்டிக் கொள்வதில்லை.

வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் வெயிலில் அதிகம் சுற்றுவதால், ஆண்களின் சருமம் விரைவில் கருமையாகி வறண்டு போய் காணப்படும்.

இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

  • எலுமிச்சை சாற்றினை நீரில் சரிசம அளவில் கலந்து, சருமத்தின் மீது தடவி 10 நிமிடம் கழித்து கழுவலாம். இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றுடன் சிறிது தேன் கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • கற்றாழை ஜெல்லை தினமும் முகத்திற்கு காலையிலும், மாலையிலும் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சரும கருமை நீங்கி, சருமம் வெள்ளையாகும்.
  • கடலை மாவுடன் பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ, சருமத்தில் உள்ள கருமை நீங்கும். இந்த முறையை ஆண்கள் தினமும் பின்பற்றி வந்தால், கருமை நீங்குவதோடு, முகம் பொலிவு பெறும்.
  • சந்தனப் பொடியுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உலர வைத்து கழுவ வேண்டும்.
  • வெள்ளரிக்காயைக் கொண்டு தினமும் முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் இருக்கும் கருமையை நீக்கும்.
  • 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர்ந்த பின் கழுவ வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow