இலகுவான முறையில் பாதவெடிப்பை நீக்கிகொள்வதற்கான முறைகள்.

பாதவெடிப்பு உள்ளவரா நீங்கள் அப்படி என்றால் இதனை செய்து பாருங்கள்.

Sep 7, 2021 - 08:32
 0  191
இலகுவான முறையில் பாதவெடிப்பை நீக்கிகொள்வதற்கான முறைகள்.

பெண்கள் நீண்ட நேரம் நீரிலேயே இருப்பதாலும் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் வெளியேறிவிடுகிறது. துணி துவைப்பது, சமையல் அறை உள்ளிட்ட வேலைகளைச் செய்யும்போது பாதம் ஈரத்தில் இருந்தால், பாதவெடிப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

பாத வறட்சியுடன் கிருமித் தொற்றும் ஏற்பட்டு பாதவெடிப்பை பெரிதாக்குவதால், குதிகால் வலி, வெடிப்பில் ரத்தக் கசிவும் ஏற்படலாம். பித்தவெடிப்புப் பிரச்சனை ஏற்பட்டவுடன், அது மேலும் அதிகரிக்காமல் தடுப்பதற்காக கால்களை அழுக்கிலும், ஈரத்திலும் இருந்து பாதுகாப்பதற்காக காலணி அணிய வேண்டும். இதன் மூலம் பாதவெடிப்பு பெரிதாகாமல் தடுக்கலாம்.

  • பாதவெடிப்பில் உள்ள டெட் செல்கள் நீங்குவதற்கான கிரீம் பயன்படுத்தி, ஸ்கிராப் மூலம் தேய்த்து நீக்கலாம். டெட்செல்கள் நீங்கிய பின் பாதவெடிப்பு போவதற்கான மாய்ஸ்சரைசர் கிரீம் பயன்படுத்தலாம். வெளியில் சென்று வந்தவுடன் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவலாம். படுக்கச் செல்லும் முன்பும் பாதங்களைச் சுத்தம்செய்து கிரீம் தடவிக்கொள்வது பாதத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க உதவும்.
  • பித்தவெடிப்பு உள்ளவர்கள், மிதவெப்பமான தண்ணீரில் கல்உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, கால்களை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின் கால்களை ஸ்கிரப் கொண்டு தேய்த்து, டெட் செல்களை நீக்கலாம். பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலைகளைத் தேய்த்துவிடலாம்.
  • விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயைச் சம அளவில் எடுத்து, அத்துடன் மஞ்சள் கலந்து, இரவில் கால்களில் அப்ளை செய்யலாம். மெழுகுடன், சம அளவு கடுகு எண்ணெய் சேர்த்துக் கலந்து, நன்கு குழைத்துக்கொள்ளவும். அதை, குதிகால்களில் வெடிப்புள்ள பகுதிகளில் தடவி, அதன்மீது லேசான துணி போட்டு பாதுகாக்கலாம். இந்த கிரீமைப் பயன்படுத்தியபடி இரவில் தூங்கப் போகும் முன் சாக்ஸ் பயன்படுத்திக்கொள்ளலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow