பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : ஏனம்மா சிவந்தது இந்தக் கன்னம்
என்னம்மா சொல்லுது இந்தக் கண்கள்
யாரம்மா சொல்லம்மா அந்தக் கள்வன்
நாணமா இன்னுமா நங்கை முன்னே……
குழு : ஒண்ணும் தெரியாத சின்னக்கா
ஓடுறா பாருடி செல்லாக்கா
திருட்டு முழி முழிக்கிறா
எதுக்கு சும்மா சிரிக்கிறா……….
பெண் : ஏனம்மா சிவந்தது இந்தக் கன்னம்
என்னம்மா சொல்லுது இந்தக் கண்கள்
யாரம்மா சொல்லம்மா அந்தக் கள்வன்
நாணமா இன்னுமா நங்கை முன்னே……
பெண் : கட்டான காளை வந்து
தொட்டுத்தான் பார்த்தானோ
கண்ணாலும் கருத்தாலும்
காதல் உன் மேல் கொண்டானோ
கட்டான காளை வந்து
தொட்டுத்தான் பார்த்தானோ
கண்ணாலும் கருத்தாலும்
காதல் உன் மேல் கொண்டானோ
பெண் : மொட்டான உன் மேனி
மலராக்கி விட்டானோ ஓஒ….ஆ…ஆ…
முத்தான முத்தத்தில்
முக்காலம் மறந்தானோ
குழு : ஒண்ணும் தெரியாத சின்னக்கா
ஓடுறா பாருடி செல்லாக்கா
திருட்டு முழி முழிக்கிறா
எதுக்கு சும்மா சிரிக்கிறா……….
பெண் : ஏனம்மா சிவந்தது இந்தக் கன்னம்
என்னம்மா சொல்லுது இந்தக் கண்கள்
யாரம்மா சொல்லம்மா அந்தக் கள்வன்
நாணமா இன்னுமா நங்கை முன்னே……
பெண் : இரவெல்லாம் ஏனோதான்
தூங்காமல் விழித்தாயோ
ஏக்கத்தால் தூக்கத்தில்
கனவொன்று கண்டாயோ
இரவெல்லாம் ஏனோதான்
தூங்காமல் விழித்தாயோ
ஏக்கத்தால் தூக்கத்தில்
கனவொன்று கண்டாயோ
பெண் : கனவால் நீ நினைவின்றி
ஏதேதோ சொன்னாயோ
காதலனை எண்ணித்தான்
உன்னை நீயே அணைத்தாயோ
குழு : ஒண்ணும் தெரியாத சின்னக்கா
ஓடுறா பாருடி செல்லாக்கா
திருட்டு முழி முழிக்கிறா
எதுக்கு சும்மா சிரிக்கிறா……….
பெண் : ஏனம்மா சிவந்தது இந்தக் கன்னம்
என்னம்மா சொல்லுது இந்தக் கண்கள்
யாரம்மா சொல்லம்மா அந்தக் கள்வன்
நாணமா இன்னுமா நங்கை முன்னே……
பெண் : மேடை ஒன்று வந்திடுமா
மாலை ரெண்டு தந்திடுமா
மஞ்சம் அதில் கொஞ்சினால் மங்கை மலர் மலருமா
மேடை ஒன்று வந்திடுமா
மாலை ரெண்டு தந்திடுமா
மஞ்சம் அதில் கொஞ்சினால் மங்கை மலர் மலருமா
கட்டில் தரும் சுகத்தை தொட்டில் மகன் தருமா ஆ….ஆ….
கட்டில் தரும் சுகத்தை தொட்டில் மகன் தருமா ஆ….ஆ….
மழலை மொழி கேட்டதும் மணவாழ்க்கை கனியுமா
பெண் : ஏனம்மா சிவந்தது இந்தக் கன்னம்
என்னம்மா சொல்லுது இந்தக் கண்கள்
யாரம்மா சொல்லம்மா அந்தக் கள்வன்
நாணமா இன்னுமா நங்கை முன்னே ஹஹஹா……