பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : தோலின் அழகடியோ
துள்ளி வரும் உடலடியோ
பால் போல் முகமடியோ
பருவமென்னும் சுகமடியோ
பெண் : நாலும் இழந்த பின்னே
நானிருக்கும் நிலையடியோ
நடமாடும் திமிர்களுக்கு
நாயகனின் கலையடியோ
பெண் : பச்சை வயலினில் வாலைப் பெண்ணே
ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே
பச்சை வயலினில் வாலைப் பெண்ணே
ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே
அச்சமில்லாமலே ஓடியதால்
இன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே
அச்சமில்லாமலே ஓடியதால்
இன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே
பெண் : பச்சை வயலினில் வாலைப் பெண்ணே
ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே
பெண் : சத்தியம் விட்டது வாழ்க்கையிலே
அது தர்மம் மறந்தது ஆசையிலே
சத்தியம் விட்டது வாழ்க்கையிலே
அது தர்மம் மறந்தது ஆசையிலே
அத்தனையும் இன்று தத்துவமானது
ஆண்டவனார் தந்த மேனியிலே
அத்தனையும் இன்று தத்துவமானது
ஆண்டவனார் தந்த மேனியிலே
பெண் : பச்சை வயலினில் வாலைப் பெண்ணே
ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே
அச்சமில்லாமலே ஓடியதால்
இன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே
பெண் : ஆறு குளங்களில் நீந்துமடி
இது ஆனந்தம் என்றதைக் கூறுமடி
ஆறு குளங்களில் நீந்துமடி
இது ஆனந்தம் என்றதைக் கூறுமடி
நூறு குளங்களில் நீந்தியபின்
அது நோயுறும் ஆற்றில் குளிக்குதடி
நூறு குளங்களில் நீந்தியபின்
அது நோயுறும் ஆற்றில் குளிக்குதடி
ஹாஹாஹ் ஹஹஹ்ஹா
பெண் : பச்சை வயலினில் வாலைப் பெண்ணே
ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே
அச்சமில்லாமலே ஓடியதால்
இன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே
பெண் : பச்சை வயலினில் வாலைப் பெண்ணே
ஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே
பெண் : மங்கலம் விட்டது குங்குமம் விட்டது
மஞ்சளும் விட்டதடி
மங்கலம் விட்டது குங்குமம் விட்டது
மஞ்சளும் விட்டதடி
அது மானமும் விட்டது ஞானமும் விட்டது
வாழ்வையும் விட்டதடி
பெண் : கொஞ்ச வயதினில் கொஞ்சி மகிழ்ந்தது
கோலம் இழந்ததடி
கொஞ்ச வயதினில் கொஞ்சி மகிழ்ந்தது
கோலம் இழந்ததடி
இன்று கோயிலின் வாசலில் நின்றதடி
ஒரு கொள்கை இல்லாதபடி
இன்று கோயிலின் வாசலில் நின்றதடி
ஒரு கொள்கை இல்லாதபடி
பெண் : தாலியிருக்கின்ற தாரங்களுக்கு
ஒரு சத்தியம் உண்டடியோ
குல தர்மம் மறந்தவள் வீதிக்கு வந்ததும்
தத்துவம் தானடியோ
இது வேலியைத் தாண்டிய வெள்ளாடு
இனி வேறிடம் ஏதடியோ
இது வேலியைத் தாண்டிய வெள்ளாடு
இனி வேறிடம் ஏதடியோ
அடி வெள்ளை மனம் கொண்ட
தோழி என் பாதையை உள்ளத்தில் வையடியோ
அடி வெள்ளை மனம் கொண்ட
தோழி என் பாதையை உள்ளத்தில் வையடியோ
பெண் : கட்டழகு எத்தனை நாள் வாலைப் பெண்ணே
அது கடவுளுக்குத்தான் தெரியும் வாலைப் பெண்ணே
கட்டழகு எத்தனை நாள் வாலைப் பெண்ணே
அது கடவுளுக்குத்தான் தெரியும் வாலைப் பெண்ணே
கட்டயவன் ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டால் ஆஅ…..ஆ….
கட்டயவன் ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டால்
அந்தக் கடவுளையும் வென்றிடலாம் வாலைப் பெண்ணே
பெண் : இப்பொழுது புரிகிறது வாலைப் பெண்ணே
கண்ணில் ஏதேதோ தெரிகிறது வாலைப் பெண்ணே
அப்பொழுது ரத்தத்தில் ஆர்ப்பாட்டம் இருந்ததடி
அப்பொழுது ரத்தத்தில் ஆர்ப்பாட்டம் இருந்ததடி
அடுத்த கதை புரியவில்லை வாலைப் பெண்ணே
பெண் : கெட்ட பின்பு ஞானம் வரும் வாலைப் பெண்ணே
நானும் பட்டினத்தார் ஆகிவிட்டேன் வாலைப் பெண்ணே
கெட்ட பின்பு ஞானம் வரும் வாலைப் பெண்ணே
நானும் பட்டினத்தார் ஆகிவிட்டேன் வாலைப் பெண்ணே
விட்டுவிடப் போகுதுயிர் விட்ட பின்னே நீயிருந்து
சுட்டு விட வேண்டுமடி வாலைப் பெண்ணே…..
சுட்டு விட வேண்டுமடி வாலைப் பெண்ணே…..