பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சாய்பாபா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : யாருன்னு கேக்கிறியா
யாருன்னு கேக்கிறியா..அண்ணே அண்ணே
யாருன்னு கேக்கிறியா
யாருன்னு கேக்கிறியா..அண்ணே அண்ணே
யாருன்னு கேக்கிறியா
அலுக்களும் குலுக்களும் தளுக்கையும் பாத்தாலே
சந்தேகம் தோணுதண்ணே
ஏனிந்த செட்டப்பு எனக்கொண்ணும் புரியல்ல
கேட்டுத்தான் சொல்லுங்கண்ணே
ஆண் : அட உன் வீட்டு சங்கதி எனக்கெதுக்கம்மா
பெண் : ஹான்
ஆண் : ஒரு நாளும் உன் வாய் இருக்காது சும்மா
பெண் : ஐயோ
ஆண் : அட உன் வீட்டு சங்கதி எனக்கெதுக்கம்மா
ஒரு நாளும் உன் வாய் இருக்காது சும்மா
அம்மம்மம்மா….
பெண் : யாருன்னு கேக்கிறியா..
அண்ணே அண்ணே யாருன்னு கேக்கிறியா
யாருன்னு கேக்கிறியா..அண்ணே அண்ணே
யாருன்னு கேக்கிறியா
பெண் : வயசு பொண்ணு எதுக்கு வந்தாலோ
வெவரம் சொல்ல எவரும் இல்லே
உரிமை என்ன புரியவில்லே
உறவு என்ன தெரியவில்லே
கழுத்தை பார்த்தேன் தாய் இல்லே
காலை பார்த்தேன் மெட்டி இல்லே
இடுப்புலதான் பிள்ளையும் இல்லே
இன்னும் என்ன நானும் சொல்ல
பெண் : ரோஜாப்பூ மாராப்ப ருதுவான பூந்தோப்ப
எங்கே புடிச்சாரோ
மத்தா பூ சிரிப்புக்கும் மை இட்ட கண்ணுக்கும்
சொக்கி விழுந்தாரோ
இப்போது அப்பா மேல் நம்பிக்கை இல்ல
சந்தேகம் வந்தாலே எப்போதும் தொல்லை
யார் அந்த பொம்பள புள்ள
பெண் : யாருன்னு கேக்கிறியா கண்ணு கண்ணு
யாருன்னு கேக்கிறியா
சொத்து சுகமில்ல சொல்லிக் கொள்ள
சொந்தங்கள் ஏதுமில்ல
நூலேதும் இல்லாத காத்தாடி போலேதான்
வீதியில் நான் அலைஞ்சேன்
அன்பான பூவுள்ளம் கூப்பிட்டதால் இங்கே
வீட்டுக்குள் நான் நொழஞ்சேன்….
அட என்கிட்டே வேர் ஒன்னும் ரகசியம் இல்லை
எப்போதும் என் நெஞ்சம் பால் போல வெள்ள
அம்மம்மம்மா….
பெண் : மழலை பிஞ்சே மயக்கம் கொள்ளாதே
மனசுக்குள்ளே களங்கம் இல்ல
ஒதுங்கி நிக்க நிழலுமில்ல
உதவி செய்ய யாருமில்ல
தவிக்கும் இந்தக் குயிலக் கண்டு
அபயம் தந்த தெய்வமுண்டு
அபயம் தந்த தெய்வத்த நம்பி
வந்தேனடி தஞ்சம் என்று
பெண் : தப்பாக நீ என்ன எப்போதும் எண்ணாதே
உண்மை இதுதானே அட அப்பாவி பொண்ண
நீ சந்தேகம் கொள்ளாதே சித்தி இல்ல நானே
சொந்தங்கள் பந்தங்கள் இல்லாத ஏழை
போவென்று சொன்னாலே போவேனே நாள
கோபங்கள் கொள்ளாதே மானே..
பெண் : யாருன்னு கேக்கிறியா கண்ணு கண்ணு
யாருன்னு கேக்கிறியா
சொத்து சுகமில்ல சொல்லிக் கொள்ள
சொந்தங்கள் ஏதுமில்ல
நூலேதும் இல்லாத காத்தாடி போலேதான்
வீதியில் நான் அலைஞ்சேன்
அன்பான பூவுள்ளம் கூப்பிட்டதால் இங்கே
வீட்டுக்குள் நான் நொழஞ்சேன்….