பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஆண் : ஹான்
பெண் : வெவரம் சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஆண் : என்ன சொல்ற
பெண் : சொல்லித் தரேன் நீயும் செய்றியா
வெவரம் சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஒண்ணும் தெரியாத மாமா
நீயும் ஆம்பளைன்னு சொல்லிக்கிடலாமா
ஒண்ணும் தெரியாத மாமா
நீயும் ஆம்பளைன்னு சொல்லிக்கிடலாமா
ஆண் : சொல்லிக்கொடு நானும் செய்யுறேன்
வெவரம் சொல்லிக் கொடு நானும் செய்யுறேன்
ஒண்ணும் தெரியாது புள்ள
நான் உன்னப் போல புத்திசாலி இல்ல
ஒண்ணும் தெரியாது புள்ள
நான் உன்னப் போல புத்திசாலி இல்ல
பெண் : சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஆண் : சொல்லிக்கொடு நானும் செய்யுறேன்
பெண் : அரச்சு வச்ச மஞ்சளும் காத்திருக்கு
தேய்ச்சு விட வா மாமா
அதுக்கு நல்ல நேரமும் வாச்சிருக்கு
தெரிஞ்சிக்கிட வேணாமா
ஆண் : மஞ்ச தேய்க்க நானா ஆளு
வம்பு வேணாம் சொன்னாக் கேளு
பெண் : மச்சான் நீங்க மறுத்தா மனம் தாங்காது
ஆண் : என்ன செய்ய ஏது செய்ய ஒண்ணும் தோணல
பெண் : அத்தனையும் கத்துத் தரேன்
போகப் போக புரியும்
ஆண் : சொல்லிக் கொடு நானும் செய்யுறேன்
பெண் : சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஆண் : ஒண்ணும் தெரியாது புள்ள
நான் உன்னப் போல புத்திசாலி இல்ல
பெண் : ஒண்ணும் தெரியாத மாமா
நீயும் ஆம்பளைன்னு சொல்லிக்கிடலாமா
ஆண் : சொல்லிக்கொடு நானும் செய்யுறேன்
பெண் : சொல்லித் தரேன் நீயும் செய்றியா
பெண் : ………………………..
ஆண் : ………………………….
ஆண் : படிக்க ஒரு வாலிப பாட்டிருக்கு
பாய் விரிக்க கூடாதா
பறிக்க ஒரு தாமரை பூத்திருக்கு
வாய் வெடிச்சு வாடாதா
பெண் : உன்னப் பார்த்தே ஏதோ ஆச்சு
வந்த தூக்கம் ஓடிப் போச்சு
ஆண் : சும்மா நீயும் இருந்தா சுகம் தோணாது
பெண் : மன்மதனும் வில்லெடுத்து அம்பு விடுறான்
ஆண் : என்ன உன்ன சேத்து வச்சு
என்னென்னவோ சொல்லுறான்
பெண் : சொல்லித் தரேன் நீயும் செய்றியா
வெவரம் சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஒண்ணும் தெரியாத மாமா
நீயும் ஆம்பளைன்னு சொல்லிக்கிடலாமா
ஒண்ணும் தெரியாத மாமா
நீயும் ஆம்பளைன்னு சொல்லிக்கிடலாமா
ஆண் : சொல்லிக்கொடு நானும் செய்யுறேன்
வெவரம் சொல்லிக் கொடு நானும் செய்யுறேன்
ஒண்ணும் தெரியாது புள்ள
நான் உன்னப் போல புத்திசாலி இல்ல
ஒண்ணும் தெரியாது புள்ள
நான் உன்னப் போல புத்திசாலி இல்ல
பெண் : சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஆண் : வெவரம் சொல்லிக்கொடு நானும் செய்யுறேன்