பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : யாரைத்தான் நம்புவதோ
பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்
உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்
பெண் : யாரைத்தான் நம்புவதோ
பேதை நெஞ்சம்
பெண் : வேட்டை ஆடும் மானானேன்
வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல்
நாட்டில் வாழும் பெண்ணானேன்
பெண் : அன்னை பெற்றாள் பெண் என்று
அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே
கருணை தந்தால் ஆகாதோ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ………
பெண் : யாரைத்தான் நம்புவதோ
பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
பெண் : அழகைக் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை
பார்த்துச் சொல்லக் கூடாதோ
பெண் : வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
மனிதர் இங்கே எவருண்டு
ஆ…..ஆஆ……ஆ…ஹா…..ஆ…….
பெண் : யாரைத்தான் நம்புவதோ
பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்
உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்