பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய்மொழி
விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய்மொழி
ஆண் : காதலின் கலைவிழா காமனின் திருவிழா
செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்
கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்
பெண் : விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய் மொழி
காதலின் கலைவிழா காமனின் திருவிழா
செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்
கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்…
பெண் : கண்ணில் என்ன மின்னல் இது கார்காலமா
ஆண் : துள்ளிச் செல்லும் தென்றல் மண ஊர்கோலமா
பெண் : தென்றல் ஆணின் ஜாதி அது எந்தன் தோளை நீவி
உடைகள் விலகும் இடையை தழுவும்
அனுபவம் நான் பார்க்கிறேன்
ஆண் : காற்றின் மீது ஏறி ஒரு காதல் ராகம் பாடி
விண்ணில் நீந்தி செல்வோம்
அதன் எல்லைக் கண்டு சொல்வோம்
பெண் : விலகாமல் பிரியாமல்
ஆனந்த ராஜாங்கம் நாம் ஆளலாம்
இருவர் : விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய் மொழி
பெண் : காதலின் கலைவிழா காமனின் திருவிழா
ஆண் : செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்
கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்
இருவர் : விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய் மொழி
ஆண் : சிற்பம் ஒன்று வந்து இளம் பெண்ணானது
பெண் : உந்தன் கைகள் தொட்டு அது பொன்னானது
ஆண் : அல்லிப் பூவில் கன்னம் கிள்ளிப் பார்க்க எண்ணும்
அமுதசுரபி வழிய வழிய பருகிடும் நாள் வந்தது
பெண் : தொட்டு பார்க்கும் கைகள்
எனை சுட்டு பார்க்கும் கண்கள்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : அள்ளப் பார்க்கும் நெஞ்சம்
அது அன்னம் தேடும் மஞ்சம்
ஆண் : சுகராகம் அரங்கேறும்
ஜாமத்தில் காமத்தின் ஆராதனை
இருவர் : விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய் மொழி
ஆண் : காதலின் கலைவிழா காமனின் திருவிழா
பெண் : செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்
கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்
ஆண் : விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய் மொழி
பெண் : விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய்மொழி