பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ஜே. கிரிஸ்
இசையமைப்பாளர் : எம். ஏ. பப்ஜி
ஆண் : …………………………..
ஆண் : விழிகள் மூடிகொண்டால்
கனவு வந்து பூக்கும்
கனவு வந்து பூத்தால்
காதல் சேர்ந்து கொள்ளும்
ஆண் : காதல் சேர்ந்து கொண்டால்
கவிதை சிறகு விரிக்கும்
கவிதை சிறகு விரித்தால்
கானம் கோடி பிறக்கும்
ஆண் : கானம் கோடி பிறந்தால்
வானம் கீதம் இசைக்கும்
வானம் கீதம் இசைத்தால்
விண்ணில் மீன்கள் முளைக்கும்
ஆண் : விண்ணில் மீன்கள் முளைத்தால்
கண்ணில் மீன்கள் துள்ளும்
கண்ணில் மீன்கள் துள்ள
அடி விழிகள் மூடி கொள்ளும்
ஆண் : ஹோ……
ஆண் : விழகள் மூடிக்கொண்டால்
கனவு வந்து பூக்கும்
கனவு வந்து பூத்தால்
காதல் சேர்ந்து கொள்ளும்
ஆண் : ஹோ…..
ஹோ……..
ஆண் : So many options and
I Chose to take emotion
You can give me vibe that is
More than a fusion
Thinking bout you got me
Go sensation
And i want what i want
When i am down on my girl
ஆண் : வான் நிலா பஞ்சனை ஆகுமே
மேகமே பூ மழை தூவுமே
தோரணம் விண்மீன் கட்டுமே
ஆயிரம் தேன் மலர் கொட்டுமே
ஆண் : விடிய விடிய விழிகள் நான்கும்
போதி மொழி பேசும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
முல்லை மல்லி ரோஜாக்கள்
கலந்து தென்றல் வீசும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
தேகம் ரெண்டு மூச்சு வாங்கி
மோக ராகம் பாடும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
பால்வெளியில் பருவ நதி
பெருக்கெடுத்து ஓடும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஆண் : ஹோ…..
ஆண் : விழிகள் மூடிகொண்டால்
கனவு வந்து பூக்கும்
கனவு வந்து பூத்தால்
காதல் சேர்ந்து கொள்ளும்
ஆண் : ஹோ…..
ஆண் : பார்வையில் மின்னலை தேக்கினாய்
பார்க்கையில் குளிர் மழை போக்கினாய்
கொஞ்சியே குழந்தை ஆக்கினாய்
கூந்தலில் ஊஞ்சல் ஆட்டினாய்
உச்சி தொற்று ஒற்றை விரல்
ஊர்ந்து ஊர்ந்து இறங்கும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
உதடு கழுத்து இதய சுவரில்
ஓவியங்கள் வரையும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
முத்து முத்தாய் தேகம் எங்கும்
வேர்வை பூக்கள் வெடிக்கும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
முத்தம் இட்டு மோக இதழ்கள்
தாகம் தீர்க்க குடிக்கும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஆண் : விழிகள் மூடிகொண்டால்
கனவு வந்து பூக்கும்
கனவு வந்து பூத்தால்
காதல் சேர்ந்து கொள்ளும்
ஆண் : காதல் சேர்ந்து கொண்டால்
கவிதை சிறகு விரிக்கும்
கவிதை சிறகு விரித்தால்
கானம் கோடி பிறக்கும்
ஆண் : கானம் கோடி பிறந்தால்
வானம் கீதம் இசைக்கும்
வானம் கீதம் இசைத்தால்
விண்ணில் மீன்கள் முளைக்கும்
ஆண் : விண்ணில் மீன்கள் முளைத்தால்
கண்ணில் மீன்கள் துள்ளும்
கண்ணில் மீன்கள் துள்ள
அடி விழிகள் மூடி கொள்ளும்
ஆண் : ஹோ……