பாடகர் : நிரஞ்சன்
இசையமைப்பாளர் : எம். ஏ. பப்ஜி
ஆண் : காதல் சொல் சொல்லாமல் சொல்கிறதே
சாதல் எனை கொல்லாமல் கொல்கிறதே
ஏதோ மனம் கொள்ளாமல் தவிக்கிறதே
ஏதோ ஏதும் இல்லாமல் இனிக்கிறதே
ஆண் : மோனாலிசா புன்னகைபோல் என்னையே
வதைக்கும் ஓர் கொடுமை
தினமும் எனக்குள் தீக்குளியல்
ஆண் பாவமே பெரும் பாவமே
வேண்டாம் வன் கொடுமை
சிரிப்பாலே சிறையில் இட்டால்
ஏன் இந்த ஆயுள் சிறை
ஆண் : அடி பெண்ணே போதும் காதல்
புயல் சீற்றம்
மழைனால் சென்னை ஆனேனே
ஆண் : தமிழே உன்னை நினைக்காமல்
நான் இருந்தால்
அமுதே உயிர் பிரிகின்ற
வலி தருதே
ஆண் : நான்தானா நான்தானா
ஏன் தானோ இது தேன் தானோ
எப்படி இப்படி ஆனேன் நான்
ஏனடி அப்படி இருந்தேன் நான்
அட காமம் இல்லைதான்
காதல் தொல்லைதான்
வேறென்ன சொல்ல நான்
வேதனை பிள்ளைதான்
ஆண் : ஒரு தீயாகி எனை தின்னும்
விதியே
இது நோயாகி எனை கொல்லும்
சதியே
ஒரு விஷமா நீ….ஹ்ம்ம்
ஒரு அமுதா நீ…..ஹ்ம்ம்
ஆண் : அட விஷமாகி அமுதமாகி
இதயத்தை ரெண்டாக்கி
அவள் தானே துண்டாக்கினால்
அட மழையாக வெயிலாக
நெஞ்சத்தை துண்டாக்கி
துண்டாகி அவள் போகிறாள்
ஆண் : அடியே….அடியே
உன்னை நினைக்காமல் நான் இருந்தால்
அடியே….
உன்னை நினைக்காமல் நான் இருந்தால்
ஓஓஓஓ……..